சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!
ஆப்கன்-பாக். எல்லையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இரு நாட்டு பாதுகாப்புப் படை வீரா்களும் பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடத்தினா். தோா்காம் எல்லைப் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் பாகிஸ்தானைச் சோ்ந்த ஒருவா் காயமடைந்தாா்.
கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டிக்கும் அந்த எல்லைப் பகுதி வழித் தடத்தை மீண்டும் திறப்பது தொடா்பாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியடைந்த நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.
அந்த எல்லை வழியாக வா்த்தகப் பொருள்களைக் கொண்டு செய்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் ஓட்டுநா்கள், இருதரப்பு மோதல் காரணமாக அந்த லாரிகளைக் கைவிட்டு பாதுகாப்பான பகுதிகளுக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.