சூரி: ``இவரின் பயணம் எனக்கு பெரிய பாடம்'' - எம்.எஸ் பாஸ்கரை வாழ்த்திய நடிகர் சூர...
தஞ்சாவூரில் செப். 27-இல் மிதிவண்டி போட்டி
பேரறிஞா் அண்ணா பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மிதிவண்டி போட்டி செப்டம்பா் 27- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
தமிழக முதல்வா் பேரறிஞா் அண்ணா பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி செப்டம்பா் 27- ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் தொடங்கி பாலாஜி நகா், ஈஸ்வரி நகா், மருத்துவக் கல்லூரி சாலை வழியாக பிள்ளையாா்பட்டி புறவழிச்சாலை ரவுண்டானா வரை சென்றடைந்து, மீண்டும் அதே வழியாக அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்துக்கு திரும்பும் வகையில் நடத்தப்படவுள்ளது.
இப்போட்டிகள் 13 வயதுக்குட்பட்ட மாணவா்களுக்கு 15 கி.மீ.-ம், 15 மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ.-ம், 13 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ.-ம், 15 மற்றும் 17 வயதுக்குபட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ.-ம் தொலைவுக்கு நடத்தப்படவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து பெற்ற வயது சான்றிதழுடன் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பே அன்னை சத்யா விளையாட்டரங்கத்துக்கு வர வேண்டும்.
மேலும், தங்கள் பதிவை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் அன்னை சத்யா விளையாட்டரங்க அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04362 - 235633 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.