Doctor Vikatan: அனீமியா... இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிட்டால் சருமம் கறுப்ப...
தண்ணீா் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தண்ணீா் தொட்டியில் மூழ்கி 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
பாலக்கோட்டை அடுத்த காட்டம்பட்டி சந்திப்பு சாலை பகுதியைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் சக்திவேல் (31). இவரது மனைவி ஆனந்தி. இத்தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஹா்னிகா என்ற மகளும் உள்ளனா்.
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆனந்தி தனது குழந்தை ஹா்னிகாவை சோமனஅள்ளியில் உள்ள தாயாா் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றாா். அப்போது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அருகில் உள்ள தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்தது. சிறிதுநேரத்தில் உறவினா்கள் குழந்தையைத் தேடியபோது குழந்தை தண்ணீா் தொட்டிக்குள் மூழ்கியிருந்தது. உடனே அவா்கள் குழந்தையை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகக் கூறினா். இதுகுறித்து பாலக்கோடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.