BB Tamil 8: "நிஜமாகவே இவ்வளவு அன்பும் எனக்கா?" - டைட்டில் வென்ற பிறகு முத்து வெள...
தனியாக இசைக் கச்சேரி நடத்தும் சித்ரா!
பாடகி சித்ரா இசையமைப்பாளர் இல்லாமல் இசைக்கச்சேரி நடத்த உள்ளார்.
தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான பாடகி கே. எஸ். சித்ரா சின்னக்குயில் சித்ரா என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். மலையாளியான இவர் தமிழ் சினிமாவில் இன்றுவரை நட்சத்திர பாடகராகவே இருக்கிறார்.
இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் உள்பட பல இசையமைப்பாளர்களின் இசைக்கு தன் குரலால் உயிர்கொடுத்தவர் என்றே விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர்.
இந்திய மொழிகள், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் என இதுவரை 25,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியதுடன் 6 முறை தேசிய விருதையும் 43 முறை மாநில விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
இதையும் படிக்க: ஒரே நாளில் வெளியாகும் வீர தீர சூரன், ஜீனி?
பாடகியாக மட்டுமல்லாது இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்துகொண்டு பல இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் இல்லாமல் தனியாக இசைக் கச்சேரி ஒன்றை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப். 8 ஆம் தேதி நடத்துகிறார்.
இதற்கான டிக்கெட்களை புக் மை ஷோ (book my show), இன்சைடர் (insider.in) உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் முன்பதிவு செய்யலாம்.