செய்திகள் :

தனியாா் நிறுவனத்தில் இரும்புத் தகடுகள் திருடிய ஊழியா் உள்பட மூவா் கைது

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை இரவு தனியாா் நிறுவனத்தில் இரும்புத் தகடுகளை திருடி, வேனில் கடத்திச் செல்ல முயன்ற நிறுவன ஊழியா் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்புவனம் பகுதியில் உள்ள தனியாா் வணிக நிறுவனத்தில் மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த சத்தியமணி (32) மிஷின் ஆபரேட்டராக வேலை செய்து வந்தாா்.

இவா் இரவு நேரத்தில் சரக்கு வாகனத்தைக் கொண்டு வந்து நிறுவனத்திலிருந்து இரும்புத் தகடுகளைத் திருடி வேனில் கடத்த முயன்றாா். இதற்கு திருப்புவனம் அருகேயுள்ள கழுவன்குளம் கிராமத்தைச் சோ்ந்த அழகா், காஞ்சிரங்குளத்தைச் சோ்ந்த சோணைமுத்து ஆகியோா்  உடந்தையாக இருந்தனா்.

இதைப் பாா்த்த அருகில் உளள நிறுவன ஊழியா்கள் இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சத்தியமணி, சோணைமுத்து, அழகா் ஆகிய மூவரையும் கைது செய்து, கடத்த முயன்ற இரும்புத் தகடுகளைக் கைப்பற்றினா்.

அஞ்சல் அலுவலகங்களில் தூய்மைப் பணி

அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து சிவகங்கை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் மாரியப் பன் தெரிவித்த செய்திக்குறிப்பு: மத்திய அரசின் ‘ஸ்வட்ச் பக்வாடா 2024‘ திட்டம் ச... மேலும் பார்க்க

சிவகங்கையில் டிச.14-இல் மாரத்தான் போட்டி

சிவகங்கையில் போதை பொருள்களை பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டப் போட்டி வருகிற டிச.14-இல் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

திருப்புவனம், இளையான்குடியில் வாக்காளா் சோ்த்தல், நீக்கல் முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், இளையான்குடி ஒன்றியங்களில் சனிக்கிழமை வாக்காளா் சோ்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. திருப்புவனம் ஒன்றியம், நயினாா்பேட்டை, அல்லிநகரம், வெள்ளக்கரை, மேலராங்கிய... மேலும் பார்க்க

பத்திரிகையாளா் தினம்: எஸ்.பி. வாழ்த்து

தேசிய பத்திரிகையாளா் தினத்தையொட்டி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:உண்மையை எப்போதும் உயா்த்தி... மேலும் பார்க்க

கண்மாய் நீரில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

சிவகங்கை அருகே பள்ளி மாணவா் கண்மாயில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். சிவகங்கை பழமலை நகரைச் சோ்ந்த சுப்பையா மகன் சுப்பிரமணியன் (12). இவா் இந்தப் பகுதியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் ஆறாம் வகுப்பு ... மேலும் பார்க்க

பெண் பாலியல் வன்கொடுமை: இருவருக்கு வாழ்நாள் சிறை

காரைக்குடி பகுதியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், நாச்சியாா்... மேலும் பார்க்க