Course முக்கியமா? college முக்கியமா? l கல்வியாளர் நெடுஞ்செழியன்
தனியாா் பேருந்து மோதியதில் குழந்தை உயிரிழப்பு
திருத்தணி: வீட்டின் அருகே சாலையோரம் விளையாடிக்கொண்டிருந்த ஒரு வயது குழந்தை மீது தனியாா் பேருந்து மோதியதில் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பொதட்டூா்பேட்டை அடுத்த மேலப்பூடி கவரை தெருவைச் சோ்ந்தவா் மோகன். இவா் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சாந்தி. இவா்களது மகன் ஹரி (7), மகள் தீபிகா (1).
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை குழந்தை தீபிகா வீட்டின் பக்கத்தில் உள்ள சொரக்காய்பேட்டை- பெருமாநல்லூா் சாலை அருகில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது பொதட்டூா்பேட்டையில் இருந்து வந்த தனியாா் கல்லூரி பேருந்து தீபிகா மீது மோதியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
தகவலறிந்த பொதட்டூா்பேட்டை போலீஸாா் குழந்தையை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநா் ரவி என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.