CSK: '2010 ஆம் ஆண்டிலும் இப்படித்தான் ஆடியிருந்தோம். ஆனால்..!' - தொடர் தோல்வி கு...
ஏப். 29 - மே 5 வரை தமிழ் வார விழா: முதல்வர் அறிவிப்பு!
வரும் ஏப். 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் 110 விதிகளின் கீழ் புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
"பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப். 29 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும். தமிழ் மொழியையும் பாவேந்தர் பாரதிதாசனின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம் எழுத்தாளர் கவிஞர் ஒருவருக்கு, பாரதிதாசன் இளம் படைப்பாளர் என்ற விருது வழங்கப்படும். புகழ்பெற்ற தமிழ் இலக்கிய படைப்பாளர்களின் படைப்புகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு அரங்கங்கள் நடத்தப்படும்.
தமிழ் மொழிகளின் பெருமைகளை எடுத்துரைக்க பள்ளிகளில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் மணக்கும் வாரமாகக் கொண்டாடப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள், கருத்தரங்கள் நடைபெறும். செந்தமிழைப் பரப்ப இந்த விழாக்கள் பயன்படும். நாம் அணைவரும் இணைந்து தமிழ் மொழியை உயர்த்துவோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: பழைய ஓய்வூதியத் திட்டம்: உரிய நேரத்தில் முடிவு - தங்கம் தென்னரசு!