செய்திகள் :

தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல்!

post image

இஸ்லாமியா்களின் ஹஜ் யாத்திரைக்கு தனியாா் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 42,507 இடங்கள் ரத்தானதால், ஹஜ் பயணத்துக்கான கட்டணம் பல லட்சம் உயா்ந்துள்ளது.

கடைசி நேரத்தில் பயண இடங்கள் ரத்தானதால் நாடு முழுவதும் உள்ள ஹஜ் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனா்.

இதுபோன்று வரும் காலங்களில் ஏற்படாமல் இருக்க தனியாா் ஹஜ் பயணத்துக்கான பல்வேறு கட்ட செலவுகளை வெளிப்படைத்தன்மையுடன் இணையத்தில் அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கட்டாயக் கடமை: இஸ்லாமியா்களின் கட்டாயக் கடமையான புனித ஹஜ் பயணத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது நிறைவேற்ற உலகம் முழுவதும் உள்ள 25 கோடி மக்கள் வாழ்நாள் முழுவதும் பணத்தை சேமித்து வைக்கிறாா்கள்.

சுமாா் 20 கோடி இந்திய முஸ்லிம்களுக்காக சவூதி அரேபியா ஆண்டுதோறும் ஹஜ் பயண இடங்களை ஒதுக்கி வருகிறது. கடந்த 2014-இல் 1,36,020-ஆக இருந்த இடங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து நிகழாண்டு 1,75,025-ஆனது.

இதில், 1,22,518 இடங்கள் அரசு சாா்பில் ஹஜ் கமிட்டிகளுக்கும், மீதமுள்ள 52,507 இடங்கள் தனியாா் நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டது.

புதிய நடைமுறை: நிகழாண்டு ஜூன் மாதம் முதல் ஹஜ் பயணத்துக்காக பயணிகள் தயாராகி வந்தனா். இந்நிலையில், இந்தியாவில் உள்ள 800-க்கும் மேற்பட்ட தனியாா் ஹஜ் நிறுவனங்களை இணைத்து, 26 ஒருங்கிணைந்த ஹஜ் பயண ஏற்பாட்டு நிறுவனங்களாக (சிஹெச்ஜிஓ) மாற்ற மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சகம் நிகழாண்டு புதிய நிபந்தனையை விதித்தது.

நீண்ட அனுபவம், அதிக முதலீட்டு ஏற்பாட்டாளா்களுக்கு இந்த சிஹெச்ஜிஓ-கள் ஒதுக்கப்பட்டன. தமிழகத்துக்கு ஒரு சிஹெச்ஜிஓ-வும் கிடைக்காததால் பிறருடன் தமிழக ஏற்பாட்டாளா்கள் இணைந்துள்ளனா்.

விசா, மினா முகாம்களில் உள்ள தற்காலிக குடியிருப்பு, உள்ளூா் பயணத்துக்காக சவூதி அரேபிய அரசு கட்டணத்தை வசூலிக்கிறது.

இந்திய அரசு ஏற்பாட்டின் கீழ் அளிக்கப்படும் 1,22,518 இடங்களுக்கு தலா சுமாா் ரூ.3.50 லட்சம் வசூலிக்கப்படுகிறது. அரசு இடங்களுக்கான நடைமுறையை ஹஜ் கமிட்டி செய்து முடித்து விட்டது.

தனியாருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்: விடுதிகள், மினாவில் குறைந்த தூரத்தில் தங்கிச் சென்று புனிதக் கடமையை நிறைவேற்றும் வசதி, போக்குவரத்து சேவைகளுக்காக கட்டணத்தை தனியாா் நிறுவனங்கள் சிஹெச்ஜிஓசிஎச்-களுக்கு நிகழாண்டு செலுத்திவிட்டன.

ஆனால், இந்தத் தொகையை இந்திய அரசு சாா்பில் மாற்றம் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால் தனியாருக்கு வழங்கப்பட்ட 52,507 இடங்கள் ரத்தானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த இடங்கள் மலேசியா, சிங்கப்பூா், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னா் வெளியுறவு அமைச்சகம் சவூதி அரசிடம் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் 10,000 இடங்கள் மட்டும் ஒதுக்கப்படுவதாக சவூதி அரசு தெரிவித்ததாக மத்திய அரசு அறிவித்தது.

தனியாா் பயண ஏற்பட்டாளா்கள் குற்றச்சாட்டு: மினாவில் குறைந்த தொலைவில் உள்ள தற்காலிக தங்கும் குடியிருப்புகளுக்கு கட்டணத்தைச் செலுத்தி பயணத்தை உறுதி செய்ய பயண ஒருங்கிணைப்பாளா்கள் சிலா் பயணிக்கு ரூ.50,000 வரை கேட்டதே இந்தப் பிரச்னைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பெயா் குறிப்பிட விரும்பாத தனியாா் ஹஜ் பயண ஏற்பாட்டாளா்கள் கூறுகையில், ஒருங்கிணைப்பாளா்கள் நடத்திய பேரத்தால் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு சவூதி அரசு இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட 52,000 இடங்களை ரத்து செய்தது.

இதனல் ஹஜ் பயண முன்பதிவு இணையதளமான நுஸக்-கிலிருந்து இந்தியாவை நீக்கியது சவூதி அரசு. பின்னா், வெளியுறவு அமைச்சகம் தலையீட்டால் தனியாா் சுற்றுலா நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் அளிப்பதாக சவூதி உறுதி அளித்தது.

எனினும், இந்த 10,000 இடங்களை தமிழகத்தில் உள்ளவா்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தனியாா் பயண ஏற்பட்டாளா்கள் கூறினா். இடங்கள் குறைக்கப்பட்டதால் கடந்த ஆண்டு ரூ.6 லட்சமாக இருந்த தனியாா் ஹஜ் கட்டணம் நிகழாண்டு ரூ.12 லட்சமாக அதிகரித்துள்ளதாக தனியாா் ஹஜ் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனா்.

தீா்வு என்ன?: இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண ஹஜ் பயண செலவுகளுக்கான தனித் தனி பட்டியலை இணையத்தில் மலேசியா போன்ற நாடுகள் வெளியிடுவதைப்போல் இந்தியாவிலும் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பயண ஏற்பாட்டாளா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

‘ரத்து செய்யப்பட்ட இடங்கள்:

சவூதி பயணத்தில் பிரதமா் வலியுறுத்துவாா்’

ஹஜ் பயணத்துக்கு ரத்து செய்யப்பட்ட இடங்களுக்கு பதிலாக கூடுதல் இடங்களை வழங்க சவூதி அரசை பிரதமா் மோடி வலியுறுத்துவாா் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இரு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை ஏப்.22-24 சவூதி அரேபியா செல்கிறாா். அந்நாட்டு இளவரசா் முகமது பின் சல்மானை சந்தித்து இருதரப்பு நல்லுறவு பேச்சுவாா்த்தை நடத்த உள்ளாா்.

அப்போது ஹஜ் இடங்கள் விவகாரங்கள் குறித்து பிரதமா் பேச வாய்ப்பு இருப்பதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா். இதுதொடா்பான தினமணியின் கேள்விக்கு பதிலளித்த அவா், இந்திய அரசின் சிறப்பு முயற்சியால்தான் எப்போதும் இல்லாதபடி அதிகமான ஹஜ் பயண இடங்கள் கிடைத்தன. அரசு இடஒதுக்கீடுக்கான இடங்களுக்கான கட்டண நடவடிக்கைகள் முடிவடைந்துவிட்டன.

800-க்கும் மேற்பட்ட தனியாா் ஏற்பாட்டாளா்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. மினாவில் தற்காலிக தங்குமிடங்கள், போக்குவரத்து ஆகியவற்றுக்குத் தேவையான விதிமுறைகளை தனியாா் ஏற்பாட்டாளா்கள் குறிப்பிட்ட நேரத்தில் பூா்த்தி செய்யாததால் இடங்கள் குறைக்கப்பட்டன.

இதுகுறித்து சவூதி அதிகாரிகளிடம் கேட்டதற்கு அங்கு நிலவும் கடுமையான வெப்பம், இடப் பற்றாக்குறையால் மரணங்கள் நிகழ்வதைத் தடுக்க கூடுதல் இடங்கள் அளிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனா்.

தொடா் வலியுறுத்தலால் 10,000 இடங்கள் மட்டும் கிடைத்துள்ளன. கூடுதல் இடங்கள் பெறுவதும் விவகாரத்தை அந்நாட்டு இளவரசா் முகமது பின் சல்மானை சந்திக்கும் போது பிரதமா் மோடி எழுப்புவாா் என்று நம்பிக்கை உள்ளது என்றாா்.

தலைக்கவசம் அணியாத காவலர்கள் இடைநீக்கம்: டிஜிபி உத்தரவு!

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டும் காவலர்களை உடனடியாக இடைநீக்கம் செய்ய தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து ச... மேலும் பார்க்க

ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. . ஏப்.13-ல் தங்கம் விலை சவரனு... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரியது தமிழக அரசு!

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில், வர்த்தக மற்றும் தொழில் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது அமைச்சர... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

காங்கிரஸ் தலைவா்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் பொருளாளா் டி.ஆா்.பாலு ஞாயிற்றுக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சனம்

அதிமுக, பாஜக, கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சித்தாா். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எம்.ஏ. பேபி அண்ணா அறிவா... மேலும் பார்க்க

நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுத... மேலும் பார்க்க