செய்திகள் :

தமிழகத்தின் மீது அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை: டி.கே.சிவகுமாா்

post image

தமிழகத்தின் மீது பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை என்று கா்நாடக மாநில துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறினாா்.

சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பான கூட்டுக் குழுக் கூட்டத்தில் டி.கே.சிவகுமாா் பங்கேற்றாா். இந்நிலையில், பெங்களூரு செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அண்ணாமலை கூறும் கருத்து முக்கியம் இல்லை. இந்த விவகாரத்தில் பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் நாட்டுக்கு என்ன சொல்கிறாா்கள் என்பதுதான் முக்கியம்.

பாஜகவுக்கு அதிக விசுவாசத்தைக் காட்ட வேண்டும் என அண்ணாமலை நினைக்கிறாா். ஆனால், தமிழகத்தின் மீது அவருக்கு விசுவாசம் எதுவும் இல்லை.

தொகுதி மறுசீரமைப்புக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் ஏன் பங்கேற்கவில்லை என்று கேட்கிறீா்கள். இது மாநிலங்கள் அளவிலான கூட்டம். தமிழகத்தைச் சோ்ந்த திமுக அரசு கூட்டிய கூட்டம். தமிழக கட்சிகளுடன் ஏற்கெனவே திமுக ஆலோசனை நடத்தியுள்ளது என்றாா் அவா்.

தமிழ்நாட்டில் 2ஆவது இடத்திற்குதான் போட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுகதான் எப்போதும் ஆளுங்கட்சி, தமிழ்நாட்டில் 2ஆவது இடத்திற்குதான் தற்போது போட்டி உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை சென்னை பெரம்பூர் ... மேலும் பார்க்க

100 நாள் வேலை பணியாளர்களின் ஊதியத்தை நிறுத்தி பட்டினி போடுகிறது: கனிமொழி எம்.பி.

100 நாள் வேலை பணியாளர்களின் ஊதியத்தை நிறுத்தி அவர்களை மத்திய பாஜக அரசு பட்டினி போடுகிறது என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "உழைப்பவன் கூலியை வியர்வை உலர... மேலும் பார்க்க

நீட் தேர்வு: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால்... மேலும் பார்க்க

முதல்வர் மு.க.ஸ்டாலினின் உகாதி வாழ்த்து

தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழின் உடன்பிறப்பு... மேலும் பார்க்க

மக்கள் கணிப்பு தான் வெற்றி பெறும்: டி.டி.வி. தினகரன்

மக்கள் கணிப்பு தான் வெற்றி பெறும் என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரை அவனியாபுரத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் தேசிய ஜனநாய... மேலும் பார்க்க

தேனியில் என்கவுன்ட்டர்: காவலர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் மரணம்!

தேனி: தேனி அருகே உசிலம்பட்டியில் காவலரை கல்லால் அடித்துக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை காவல் துறை அதிகாரிகள் இன்று(மார்ச் 29) சுட்டுப் பிடிக்க முற்பட்டதில் அந்த நபர் உயிரிழந்தார்... மேலும் பார்க்க