தேனியில் என்கவுன்ட்டர்: காவலர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் மரணம்!
தேனி: தேனி அருகே உசிலம்பட்டியில் காவலரை கல்லால் அடித்துக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை காவல் துறை அதிகாரிகள் இன்று(மார்ச் 29) சுட்டுப் பிடிக்க முற்பட்டதில் அந்த நபர் உயிரிழந்தார்.
கஞ்சா வியாபாரி என்று சொல்லப்படும் பொன்வண்ணன் என்கிற அந்த நபர் காவலர்களிடம் சிக்காமலிருக்க அவர்களை தாக்கிவிட்டு தப்பிஜ்யோடியுள்ளார். அப்போது அவரை காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன், முத்துக்குமார் என்கிற காவலரை பொன்வண்ணன் தகராறில் அடித்துக் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.