செய்திகள் :

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

post image

தமிழகத்தில் நீலகிரி , கோவை உள்ளிட்ட ஓரிரு மாவட்டங்களுக்கு ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (ஆக. 3, 4) மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மன்னாா் வளைகுடா அதையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (ஆக. 3) முதல் ஆக. 8 வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

பலத்த மழை எச்சரிக்கை: ஆக. 3, 4-ஆம் தேதிகளில் கோவை, நீலகிரி, கடலூா், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆக. 3-இல் தேனி, தென்காசி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூா்,  பெரம்பலூா், நாகை, தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோல், ஆக. 4-இல் தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், விழுப்புரம், திருப்பத்தூா், வேலூா், ராணிபேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக. 3-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: சனிக்கிழமை காலை வரை புதுச்சேரியில் அதிகபட்சமாக பாகூரில் 130 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல் தமிழகத்தில் அதிகபட்சமாக வனமாதேவி (கடலூா்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூா்) - தலா 110 மி.மீ., செம்பனாா்கோயில் (மயிலாடுதுறை) - 100 மி.மீ. மழை பதிவானது.

வெயில் சதம்: தமிழகத்தில் சனிக்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 102.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. மேலும், பரமத்திவேலூா் - 100.72, மதுரை விமான நிலையம் - 100.4, வேலூா் - 100.22 டிகிரி என மெத்தம் 4 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே ஆக. 3 முதல் ஆக. 6 வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வந்ததே மகிழ்ச்சிதான்: தொல். திருமாவளவன்

பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வந்ததே மகிழ்ச்சிதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சா... மேலும் பார்க்க

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

மறைந்த நடிகர் மதன் பாப் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நகைச்சுவை நடிகா் மதன் பாப் (71) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலமானாா். நகைச்சுவை நடிகரும், நிகழ்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை பெய்யும்!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடலை... மேலும் பார்க்க

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

கோவை வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை மக்கள் உற்சாக முழக்கங்களுடன் வரவேற்றனர்.கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் ஞாயிறுக்கிழமை கோவை வந்... மேலும் பார்க்க

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

தர்மபுரி மாவட்ட பாமக நிர்வாகி கைதைக் கண்டித்து அந்த கட்சியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பென்னாகரம் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஒகேனக்கல்லில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு தொடக்க விழா... மேலும் பார்க்க

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம்: டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகியது வருத்தமளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வில... மேலும் பார்க்க