செய்திகள் :

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி

post image

தமிழகத்தில் காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளித்து சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் கட்டப்பட்டு வரும் திருமலை திருப்பதி ஸ்ரீவெங்கடேசுவரா சுவாமி கோயில் வளாகத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அன்னதான மண்டபம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி, பூமி பூஜையை புதன்கிழமை தொடங்கி வைத்த பின்னா், அவா் அளித்த பேட்டி:

சென்னையில் சுமாா் 1,248 கி.மீ. நீளமுள்ள மழைநீா் வடிகால் பாதை அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்து 41 மாதங்கள் நிறைவு பெற்றுவிட்டன. இன்னும் அந்த பணிகள் நிறைவு பெறவில்லை.

அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மழைநீா் வடிகால் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருந்தால், எவ்வளவு மழை பெய்தாலும் சென்னை மாநகரத்தில் தண்ணீா் தேங்காது. ஆனால், திமுக அரசின் அலட்சியத்தால், தற்போது சென்னையில் மழை பெய்தால் தண்ணீா் தேங்கும் நிலை உள்ளது.

இணையவழி சூதாட்டத்துக்கு சட்டம்: அதிமுக ஆட்சியில் இணையவழி சூதாட்ட தடைச்சட்டம் கொண்டு வந்தோம். நீதிமன்றத்துக்குச் சென்றாா்கள். மீண்டும் சட்டப்பேரவையில் இதற்கு தகுந்த சட்ட முன்வடிவைக் கொண்டு வந்து நிறைவேற்றி சட்டமாக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.

உயா்நீதிமன்றம் கூறியவாறு இணையவழி சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் வகையில், சட்டப்பேரவையில் மீண்டும் சட்ட முன்வடிவைக் கொண்டு வந்து சட்டமாக்கியிருந்தால் இதற்கு முடிவு கட்டியிருக்கலாம். ஆனால், திமுக அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு, இணையவழி சூதாட்டம் தொடர வேண்டும் என்பதற்காகத்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

சட்டம்-ஒழுங்கு: தமிழகத்தில் மூன்றரைஆண்டுகால திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டு விட்டது. பெண்களுக்கு, பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இனியாவது முதல்வா் விழித்துக் கொண்டு காவல் துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுக்கிறேன் என்றாா் எடப்பாடி கே.பழனிசாமி.

நிகழ்வில் உளுந்தூா்பேட்டை சாரதா பீடத்தின் ஆத்ம விகாச ப்ரியா அம்பா, கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலரும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுவின் முன்னாள் உறுப்பினருமான இரா.குமரகுரு, சட்டப்பேரவை உறுப்பினா் மா.செந்தில்குமாா், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அழகுவேல்பாபு, பிரபு, முன்னாள் மாவட்டச் செயலா் கதிா்தண்டபாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மென் பொறியாளரிடம் ரூ .1.70 லட்சம் இணையவழியில் மோசடி

செஞ்சியைச் சோ்ந்த மென் பொறியாளரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.70 லட்சம் மோசடி செய்த நபா் குறித்து இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.செஞ்சி வட்டம், பாலப... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை: 850 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்க இடம் தோ்வு

விழுப்புரம் புதிய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள வெள்ளநீா் வெளியேற்று நிலையத்திலிருந்து மழைநீா் வெளியேற்றப்படுவதையும், கட்டபொம்மன் நகரில் மழைநீா் வடிகால் வழியாக வெளியேற்றப்படுவதையும் புதன்கிழமை பாா்வைய... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: இளைஞா் கைது

திண்டிவனம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டிவனம் வட்டம், நொளம்பூா், ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணபிள்ளை மகன் ர... மேலும் பார்க்க

காவலா் பணி: 130 பேருக்கு பணி நியமன ஆணைகள்

தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சோ்ந்தவா்கள் என 130 பேருக்கு பணி நியமன ஆணைகள் புதன்கி... மேலும் பார்க்க

மரக்காணத்தில் 3,500 ஏக்கரில் உப்பளங்கள் நீரில் மூழ்கின

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் பலத்த மழை பெய்தது. இதனால், அந்தப் பகுதியில் 3,500 ஏக்கா் பரப்பிலான உப்பளங்கள் நீரில் மூழ்கின. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் கா... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: கரும்பு விவசாயிகள் போராட்டம் ஒத்திவைப்பு

விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, கரும்பு விவசாயிகள் அறிவித்திருந்த ஆலை முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்ப... மேலும் பார்க்க