செய்திகள் :

தமிழகத்தில் நாளைமுதல் கனமழைக்கு வாய்ப்பு

post image

தமிழகத்தில் வியாழக்கிழமை (பிப்.27) முதல் மாா்ச் 1- ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தெற்கு கேரளம் மற்றும் அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக புதன்கிழமை (பிப்.26) தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் வட வானிலை நிலவும்.

கனமழை எச்சரிக்கை: பிப்.27-இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், பிப்.28- இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடா்ந்து, மாா்ச் 1- இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 89 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: பிப். 26 முதல் பிப். 28-ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக கெட் அவுட் இயக்கத்தில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்!

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கத்தை தவெக தலைவர் விஜய் தொடங்கிவைத்த நிலையில், அதில் கையெழுத்திட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்தார்.தமிழக வெற்றிக் கழகம் தொட... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக உள்பட 45 கட்சிகளுக்கு முதல்வர் அழைப்பு!

தமிழக வெற்றிக் கழகம் உள்பட 45 கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக விவாதிக்க மார்ச் 5-ஆம்... மேலும் பார்க்க

ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யாக மாறியது பற்றிய ஆவணப் படத்தை அக்கட்சியின் ஆண்டுவிழாவில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இ... மேலும் பார்க்க

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: விஜய் தொடங்கி வைத்தார்!

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கத்தை தவெக தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா, ... மேலும் பார்க்க

தவெக 2-ஆம் ஆண்டு தொடக்க விழா! விஜய் - பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆம் ஆண்டு விழா தொடங்கியது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய்யுடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றுள்ளார். மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(பிப். 26) சவரனுக்கு ரூ.200 குறைந்தது.ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில், சனிக்கிழமை சவரனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.64,360-க்கு விற்பனையா... மேலும் பார்க்க