`இனி யாசகம் செய்யக் கூடாது; மீறிச் செய்தால்...' - கடும் உத்தரவை பிறப்பித்த இந்த...
தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
சென்னை: வருவாய்த் துறை செயலராக உள்ள அமுதா உள்பட தமிழகத்தில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வரும் 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசில் முக்கிய பொறுப்புகளை வகித்து வரும் முதன்மை செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகள், கூடுதல் தலைமை செயலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
முதன்மை செயலாளர் அந்தஸ்தில் உள்ள வருவாய்த் துறை செயலர் அமுதா மற்றும் அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின் உள்ளிட்டோர் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள்.
மேலும், காகர்லா உஷா, அபூர்வா ஆகியோருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் ஐந்து பேரும் 1994ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.