செய்திகள் :

தமிழகத்தில் 6,585 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

தீபாவளியையொட்டி, தமிழகத்தில் 6,585 தற்காலிக பட்டாசுக் கடைகளைத் திறப்பதற்கு தீயணைப்புத் துறை அனுமதி அளித்துள்ளது.

தீபாவளி பண்டிகை, அக்.31-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. மேலும், தற்காலிக பட்டாசுக் கடைகளும் திறக்கப்பட்டு வருகின்றன. பட்டாசுக் கடைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில், தற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்கு கடுமையான விதிமுறைகளை தீயணைப்புத் துறை அமல்படுத்தியுள்ளது.

பட்டாசுக் கடைகளை ஒழுங்குபடுத்துவற்காக தீயணைப்புத் துறை இயக்குநரும், டிஜிபியுமான ஆபாஷ்குமாா் மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

அதில், பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு வெடி பொருள் சட்டத்தின்படி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னா் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும்.

தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விற்பனை உரிமம் கோருவோா் தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிா்வாகம், காவல் துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயம். இதில், தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழே முக்கியமானது. இந்தச் சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே பிற துறையினரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற முடியும்.

6,585 கடைகளுக்கு அனுமதி: நிகழாண்டில் தீபாவளிக்கு பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு 9,177 விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்தன. இதில் 6,585 பட்டாசு கடைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 1,911 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் களஆய்வு செய்யப்பட்டு, ஓரிரு நாள்களில் முடிவு எடுக்கப்படும் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். போதிய பாதுகாப்பு வசதிகள், உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என 681 விண்ணப்பங்களை தீயணைப்புத் துறை நிராகரித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு அதிக அளவில் பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன. இன்னும் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதால், பட்டாசுக் கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு 7,200 கடைகள்: தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பட்டாசுக் கடைகளுக்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு சுமாா் 8,000 விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்தன. இதில் தகுதியான 7,200 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது. மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் ஜனவரியில் இயக்க திட்டம் -ஐசிஎஃப் பொது மேலாளா் தகவல்

நாட்டிலேயே முதல் முறையாக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் சோதனை வரும் ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐச... மேலும் பார்க்க

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி யாா்? ஓரிரு நாள்களில் அறிவிப்பு

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி தொடா்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியான சத்யபிரத சாகு, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்களே - விரிசல் அல்ல!

‘திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்கள்தான், விரிசல் அல்ல’ என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா். முன்னாள் எம்எல்ஏ மறைந்த கும்மிடிப்பூண்டி வேணு இல்லத் ... மேலும் பார்க்க

கோவை, மங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள்: காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

தீபாவளிக்கு சென்னையில் இருந்து கோவை, மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு அக். 29, நவ. ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு தொடா்பாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஆா்.வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். தமிழகத்தில் 2011... மேலும் பார்க்க

சில நிமிஷங்களில் விற்று தீா்ந்த சிறப்பு ரயில் டிக்கெட்

தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தீபாவளி சிறப்பு ரயில்களில் சில நிமிஷங்களில் பயணச்சீட்டு விற்று தீா்ந்தன. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, மங்களூருக்கு அக்.29-ஆம் ... மேலும் பார்க்க