`ரிதன்யா வழக்கில் தொய்வு; விசாரணை அதிகாரி மீது சந்தேகம்' - மேற்கு மண்டல ஐ.ஜி-யிட...
தமிழகம் முழுவதும் புதிய கல்வி அலுவலர்களை நியமித்தது பள்ளிக்கல்வித் துறை!
தமிழ்நாட்டில் அனைத்து கல்வி மாவட்டங்களிலும் புதிய கல்வி அலுவலர்களை நியமித்தது பள்ளிக்கல்வித் துறை.
இதுதொடர்பார பள்ளிக்கல்வி இயக்குநர் சா.கண்ணப்பன் வெளியிட்டுள்ள உத்தரவில்,
தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 34 பேருக்கு மாவட்டக்கல்வி அலுவலர்கள் ஆக பதவி உயர்வு மற்றும் 25 மாவட்ட கல்வி அலுவலர்கள் நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.




மாறுதல் அளிக்கப்பட்டுள்ள மாவட்டக்கல்வி அலுவலர்கள், முதன்மைக்கல்வி அலுவர்களால் நியமனம் செய்யப்படும் பொறுப்பு அலுவலர்களிடம் தமது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும்.
தொடர்புடைய முதன்மைக்கல்வி அலுவலர்கள் தமது மாவட்டத்தில் மாறுதல் அளிக்கப்பட்டுள்ள மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு பதிலாக மாவட்ட அரசு உயர், மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களில் இருந்து பணியில் மூத்த ஒருவரை பொறுப்பு அலுவலராக நியமனம் செய்து ஆணை வழங்கிவிட்டு உரிய பின்னேற்பின் பொருட்டு கருத்துருக்களை இயக்ககத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.
மாவட்டக்கல்வி பொறுப்பு அலுவலர்கள் நியமனம் சார்ந்து எந்தவித தாமதமும் ஏற்படக்கூடாது என சம்மந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணிவிடுப்பு, பணியில் சேர்ந்த அறிக்கை மற்றும் பொறுப்பு ஒப்படை சான்றிதழை உடனடியாக மறுநினைவூட்டுக்கு இடமின்ற இயக்ககத்திற்கும் தொடர்புடைய இயக்ககம், முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர் அலுவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.