செய்திகள் :

தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி: மக்களவையில் பாஜக எம்பி

post image

தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி என்று மக்களவையில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே திங்கள்கிழமை பேசியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை தொடங்கிய நிலையில், தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று தமிழக எம்பிக்கள் தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “சூப்பர் முதல்வர் ஒருவரின் பேச்சைக் கேட்டு தமிழக அரசு கையெழுத்திட மறுப்பு தெரிவிக்கிறது” என்றார்.

மேலும், தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க : யார் அந்த சூப்பர் முதல்வர்?

இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கை பற்றி பேசிய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே சமஸ்கிருதம்தான் பழமையான மொழி என்று தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

”திமுக அரசு எப்போதும் தமிழ் மிகவும் பழமையான மொழி என்கிறார்கள். ஆனால், சமஸ்கிருதம் என்பது அதனைவிட பழமையான மொழி. கர்நாடகம், தெலங்கானா, தமிழகம் உள்பட நாடு முழுவதும் அனைத்து கோயில்களிலும் வழிபாட்டு மொழி சமஸ்கிருதம்தான்.

தேர்தலுக்காக கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசுகிறார்கள். திமுக என்பது காங்கிரஸுடன் இணைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

நாட்டின் அடிப்படையையே தகர்ப்பதற்கு திமுக விரும்புகிறது. ஆங்கிலத்தை புகுத்த முயற்சிக்கிறார்கள். மக்களை அவர்கள் தூண்டிவிடப் பார்க்கிறார்கள். இது ஏற்றுக் கொள்ளதக்கது அல்ல, உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.

தங்கம் கடத்தல்: நடிகை ரன்யா ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவு!

தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கன்னட நடிகை ஹர்ஷவர்தினி ரன்யா(ரன்யா ராவ்) வெளிநாடுகளிலிருந்து சட்டத்துக்க... மேலும் பார்க்க

பிரித்தாளும் அரசியல் பிடிக்கவில்லை: பாஜக எம்எல்ஏ திரிணமூல் காங். கட்சியில் ஐக்கியம்!

கொல்கத்தா : மேற்கு வங்கத்திலுள்ள ஹல்தியா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக உள்ள பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்திருந்த தாபசி மண்டல், இன்று(மார்ச் 10) அம்மாநில ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இ... மேலும் பார்க்க

சம்பல் வன்முறையில் சிறை சென்ற பெண்: விடுதலையாக உதவிய 120 கிலோ உடல் எடை!

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் குற்றவாளியாகக் கருதி சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் பெண் 84 நாள்களுக்குப் பிறகு நிரபராதி என உறுதி செய்யப்பட்டு விடுதலையாகியுள்ளார். அவர் ... மேலும் பார்க்க

முதலிரவில் புதுமண தம்பதி மரணம்! காரணம் தெரியாமல் குழப்பத்தில் உறவினர்கள்

திருமண நாளன்று இரவில் புதுமண தம்பதி மரணித்திருப்பது அயோத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியில் கடந்த மார்ச் 7-ஆம் தேதியன்று பிரதீப் என்ற இளைஞருக்கும்... மேலும் பார்க்க

ஆடம்பர ஆடைகளைத் தவிர்க்கும் இந்திய மணப்பெண்கள்!

இந்திய மணப்பெண்கள் திருமண நாளில் ஆடம்பர ஆடைகள் அணிவதைத் தவிர்த்து வருவதாக நட்சத்திர ஆடை வடிவமைப்பாளர் சப்யாசச்சி முகர்ஜி தெரிவித்துள்ளார். ஆடம்பரமான இந்திய திருமண கலாசாரத்துக்கு மாறாக எளிமையான வடிவமைப... மேலும் பார்க்க

சோப்பு விலையை உயர்த்தும் முன்னணி நிறுவனங்கள்!

சோப்பு விலையை உயர்த்த முன்னணி சோப்பு தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பாமாயில் தயாரிப்பு சரிவைச் சந்தித்துள்ள நிலையில், பாமாயில் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற... மேலும் பார்க்க