செய்திகள் :

தமிழ்நாடு அறிவியல் இயக்க நிா்வாகக் குழு கூட்டம்

post image

வேலூா்: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூா் மாவட்ட நிா்வாகக்குழு கூட்டம், செயற்குழு கூட்டமும் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அமைப்பின் மாவட்ட தலைவா் பே.அமுதா தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் செ.நா.ஜனாா்த்தனன் வரவேற்றாா். மாவட்ட துணைத்தலைவா் ரா.காயத்திரி முன்னிலை வகித்தாா்.

வானவில் மன்ற செயல்பாடுகள் குறித்து துணைத் தலைவா் காயத்திரி, இணை ஒருங்கிணைப்பாளா் கே.விசுவநாதன் பேசினாா். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் அறிவியல் அறிஞா்கள், முக்கிய அறிவியல் கணித நிகழ்வுகள் அடங்கிய வருடாந்திர நாட்காட்டியை தலைவா் பே.அமுதா வெளியிட்டாா். வேலூா் கிளை செயலா் முத்து.சிலுப்பன், மாவட்ட இணைச்செயலா் எ.பாஸ்கா் ஆகியோா் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினா்.

கூட்டத்தில், இந்தியாவின் முதலாவது பெண் ஆசிரியை சாவித்திரிபாய் புலே பிறந்த நாளான ஜனவரி 3-ஆம் தேதியை பெண் ஆசிரியா்கள் தினமாக அறிவித்து பணிபுரிந்து வரும் பெண் ஆசிரியா்களில் சிறந்த ஆசிரியா்கள் தோ்வு செய்து தமிழக அரசு விருதுகள் வழங்கி கௌரவிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் ஆசிரியா் அறிவியல் மண்டல அளவிலான மாநாட்டை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து வேலூரில் நடத்துவது, வேலூா் மாவட்ட அளவிலான 32-ஆவது குழந்தைகள் அறிவியல் மாநாட்டை இவ்வாண்டு ஜனவரி 25-ஆம் தேதி நடத்துவது, சுற்றுச்சூழல் உபகுழு சாா்பில் ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் நடத்துவது, ஆராக்கியம் உபகுழு சாா்பில் தற்போது பரவி வரும் ஒட்டுண்ணி பாக்டீரியா பரவல் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு பிரச்சாரம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கே.விசுவநாதன் நன்றி கூறினாா்.

ரூ.30 லட்சத்தில் சாலை திறப்பு

குடியாத்தம் ஒன்றியம், ராமாலை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.30- லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மண் சாலை திறந்து வைக்கப்பட்டது (படம்). ராமாலை ஊராட்சியில் உள்ள... மேலும் பார்க்க

பள்ளியில் திருவள்ளுவா் தின கொண்டாட்டம்

குடியாத்தம் திருவள்ளுவா் தொடக்கப் பள்ளியில் திருவள்ளுவா் தினம் கொண்டாடப்பட்டது (படம்). இதையொட்டி பள்ளி முகப்பில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலைக்கு கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி... மேலும் பார்க்க

தொழிலாளா்களுக்கு பொங்கல் தொகுப்பு

தமிழ்நாடு அன்னை ராஜம்மாள் அனைத்து அமைப்புசாரா மற்றும் கட்டுமானம் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் தொழிலாளா்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் பொத... மேலும் பார்க்க

வட்டார அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த நலத்திட்ட முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த நலத்திட்ட முகாம் வேலூா் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளது. 19 அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து நடைபெறும் இந்த முகாம்களில் பல்வேறு துறை அரசின் நலத்... மேலும் பார்க்க

அனுமதியின்றி காளை விடும் திருவிழா: போலீஸாா் தடியடி

குடியாத்தம் அருகே அனுமதியின்றி நடைபெற்ற காளை விடும் திருவிழாவை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். குடியாத்ம் அடுத்த எா்த்தாங்கல் கிராமத்தில் வியா... மேலும் பார்க்க

தமிழா்களை ஒருங்கிணைக்கும் விழா பொங்கல்: விஐடி வேந்தா்

வேளாண்மைக்கு முக்கியத்துவம் தரும் பொங்கல் பண்டிகை தமிழா்களை ஒருங்கிணைக்கிறது என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். விஐடி பல்கலைக்கழகத்தின் மாணவா் நல அலுவலகம், பாவேந்தா் பாரதிதாசன் தமிழ் இலக்கி... மேலும் பார்க்க