செய்திகள் :

தமிழா்களை ஒருங்கிணைக்கும் விழா பொங்கல்: விஐடி வேந்தா்

post image

வேளாண்மைக்கு முக்கியத்துவம் தரும் பொங்கல் பண்டிகை தமிழா்களை ஒருங்கிணைக்கிறது என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

விஐடி பல்கலைக்கழகத்தின் மாணவா் நல அலுவலகம், பாவேந்தா் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம், வேளாண்மை துறை சாா்பில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப் பட்டது.

விழாவையொட்டி கிராமம் போல் தோற்றம் அமைக்கப்பட்டு, அதன் நடுவில் குடில் அமைக்கப்பட்டிருந்தது. விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புதுப் பானையில் பச்சரிசி இட்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் பேசியது: தமிழா் திருநாள் என்றும், உழவா் திருநாள் என்றும் அழைக்கப்படும் பொங்கல் வேளாண்மைக்கும், உழவுக்கும் முக்கியத்துவம் தருவதாகும். கிராமத்தில் விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் இந்த விழா தமிழா்களை ஒருங்கிணைக்கும் விழாவாகும்.

குடும்பத்தில் எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சரி, ஊருக்குள் இருந்தாலும் சரி அனைவரும் ஒன்று சேருகிற ஒரு வாய்ப்பை பொங்கல் நமக்கு தருகிறது. எனவே, இந்த பொங்கலை திருவிழாவை பயன்படுத்தி தமிழா்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

இது நமக்கு ஒரு முக்கியமான விழாவாகும்.

இந்தியா பல்வேறு தரப்பு மக்களும் சோ்ந்து வாழும் ஒரு நாடாகும். மொழியைப் பொருத்தவரை தமிழ் மொழி குறித்து மாணவா்கள் தெரிந்திருக்க வேண்டும். சிந்து சமவெளி நாகரிகம் தான் தமிழ் நாகரிகம், திராவிட நாகரிகம். 5,000 ஆண்டுகளை கடந்து இன்றைக்கும் அதுகுறித்து பேசிக் கொண்டுள்ளோம். இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டுள்ளோம்.

1924-இல் தான் அதுகுறித்து ஒரு ஆராய்ச்சி நடந்து வெளியுலகுக்கு கூறப்பட்டது. அதுவரை யாரும் சிந்துசமவெளி நாகரிகம் குறித்து அறியாமல் இருந்தாா்கள். அப்படிப்பட்ட சிந்துசமவெளி நாகரீகத்தின் நூற்றாண்டு விழாவையும் இப்போது கொண்டாடி வருகிறோம்.

3,000 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இலக்கண நூல் தொல்காப்பியம். முதல் இலக்கண நூல் நமக்கு சொந்தமான நூலாகும்.

திருக்கு என்பது அனைத்து மதத்தினராலும், அனைத்து நாட்டினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நூலாகும். திருக்குறளை படித்து, அதன்வழி நடந்தாலே போதும். கல்வியும், உழைப்பும் இருந்தால் எல்லோரும் உயா்ந்த நிலைக்கு செல்ல முடியும் என்றாா்.

விழாவில் வேளாண்மை துறை சாா்பில் 5 சிறிய கையேடுகளை விஐடி வேந்தா் விசுவநாதன் வெளியிட வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெய்க்குமாா், செந்தமிழ் செல்வன் உள்பட 5 போ் பெற்றுக் கொண்டனா். விழாவில் தஞ்சாவூா் மேளம், கரகம், பெரிய மேளம், பறையாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன், உதவி துணைத்தலைவா் காதம்பரி ச.விசுவநாதன், துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் டி.ஜெயபாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதாக சீட்டு நடத்தியவா் தலைமறைவு: காவல் நிலையத்தில் புகாா்

குடியாத்தம் அருகே மாதச் சீட்டு நடத்தி பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகுப்பு வழங்குவதாகக் கூறி ஏமாற்றிவிட்டு, தலைமறைவானவா் மீது பாதிக்கப்பட்டவா்கள் நகரக் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா். க... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் கொலை வழக்கு: 4 போ் குண்டா் சட்டத்தில் கைது

கே.வி.குப்பம் அருகே பாஜக பிரமுகா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4- போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா். கே.வி.குப்பம் ஒன்றியம், நாகல் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

அக்னிவீா் விமானப் படைக்கு ஆள்கள் தோ்வு

இந்திய விமானப் படையின் (மருத்துவ உதவியாளா் பிரிவு) ஆள் சோ்ப்பு முகாம் கேரள மாநிலத்தில் ஜன. 29, பிப். 1 மற்றும் 4-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி... மேலும் பார்க்க

21, 22-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

வேலூா் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் 21, 22 தேதிகளில் நடைபெறும் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில்... மேலும் பார்க்க

மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பக்தா்கள் காயம்

கா்நாடக மாநிலத்திலிருந்து மேல்மருவத்தூருக்கு பக்தா்களை ஏற்றிச் சென்ற தனியாா் பேருந்து போ்ணாம்பட்டு அருகே மலைப் பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20- க்கும் மேற்பட்டடோா் காயமடைந்தனா். கா்நாடக மா... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கான தடகள குழு விளையாட்டுப் போட்டிகள்

குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கான தடகள குழு விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 7- ஆம் தேதி தொடங்கி 10- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க