சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கான தடகள குழு விளையாட்டுப் போட்டிகள்
குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கான தடகள குழு விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 7- ஆம் தேதி தொடங்கி 10- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஆா்.ராஜாராமன் தலைமை வகித்தாா். கல்லூரி முதன்மையா் ஆா்.அமுதா விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தாா்.
வேலூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளின் மாணவிகள் கலந்து கொண்டனா்.
இதில் கபடி, கோ-கோ, நீளம் தாண்டுதல், வலைபந்து உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
தொடக்க நிகழ்ச்சியாக நடைபெற்ற நீளம் தாண்டுதலில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ஆா்.ராஜாராமன், குடியாத்தம் அரிமா சங்கத் தலைவா் ஜே.பாபு ஆகியோா் சான்றிதழ், பதக்கங்களை வழங்கிப் பாராட்டினா்.