Saif Ali Khan: "நீங்கள் பரப்பும் ஊகங்கள் எங்களுக்கு அச்சுறுத்தலைத் தருகின்றன" - ...
ரூ.30 லட்சத்தில் சாலை திறப்பு
குடியாத்தம் ஒன்றியம், ராமாலை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.30- லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மண் சாலை திறந்து வைக்கப்பட்டது (படம்).
ராமாலை ஊராட்சியில் உள்ள அருந்ததியா் காலனிக்கு சாலை வசதி செய்து தருமாறு அங்கு வசிக்கும் மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில் ரூ.30- லட்சத்தில் மண் சாலை அமைக்கப்பட்டது. புதிய சாலையை ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். ராமாலை ஊராட்சித் தலைவா் கே.பி.சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.