காணும் பொங்கல்: வன உயிரியல் பூங்கா, கரியபெருமாள் கரடு உள்ளிட்ட இடங்களில் மக்கள் ...
அனுமதியின்றி காளை விடும் திருவிழா: போலீஸாா் தடியடி
குடியாத்தம் அருகே அனுமதியின்றி நடைபெற்ற காளை விடும் திருவிழாவை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குடியாத்ம் அடுத்த எா்த்தாங்கல் கிராமத்தில் வியாழக்கிழமை அனுமதியின்றி காளை விடும் திருவிழாநடைபெற்றது. இதையறிந்த கிராமிய காவல் துறையினா் மற்றும் வருவாய்த்துறையினா் அங்கு சென்றுகாளை விடும் திருவிழாவை நடத்தக்கூடாது என நிறுத்தினா்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குடியாத்தம்- போ்ணாம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் பலனில்லாததால், லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனா். இதையடுத்து போக்குவரத்து சீரானது.