செய்திகள் :

பிரபல ஹாலிவுட் இயக்குநர் டேவிட் லின்ச் காலமானார்!

post image

புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் டேவிட் லின்ச் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் காலமானார். அவருக்கு வயது 78.

ஹாலிவுட்டில் புகழ்பெற்ற திரைப்படங்களான புளூ வெல்வெட், முல்ஹோலண்ட் டிரைவ் மற்றும் தொலைக்காட்சி தொடரான டுவின் பீக்ஸ் ஆகியவற்றின் இயக்குநரான டேவிட் லின்ச் உடல்நலக் குறைவால் காலமானார். அவர் இறந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் முகநூல் மூலம் தெரிவித்தனர்.

இவரின் டுவின் பீக் தொடர் மூன்று கோல்டன் குளோப்ஸ், 2 எம்மிகள் மற்றும் அதன் இசைக்காக ஒரு கிராமி விருதையும் வென்றது.

டேவிட் லின்ச் புளூ வெல்வெட் படத்திற்காக ஆஸ்கர் பரிந்துரைக்கப்பட்டார். மேலும் 2019 ஆம் ஆண்டில் வாழ்நாள் சாதனையாளருக்கான அகாடமி விருதைப் பெற்றார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் காலமான இயக்குநர் டேவிட் லின்ச்சின் மறைவுக்கு ஏராளமான ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வெடித்துச் சிதறிய எலானின் ராக்கெட்! பதறாத எலான்!

எலான் மஸ்க்கின் விண்கலச் சோதனையில் ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்துச் சிதறியது.டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தனது ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் விண்கலன்களை அனுப்பி சோதனை செய்து வருகிறத... மேலும் பார்க்க

சீன மக்கள்தொகை 3-வது ஆண்டாக தொடர்ந்து சரிவு!

சீனாவில் மக்கள்தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் 2-வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில், குழந்தைப் பிறப்பு விகிதம் ... மேலும் பார்க்க

இஸ்ரேல் - காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்: இந்தியா வரவேற்பு!

இஸ்ரேல் - காஸா இடையே நடைபெற்று வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக்கொண்டதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் பல மாத பேச்சுவார்த்தைக்குப் பிற... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ: ரூ. 71 லட்சம் நன்கொடை அளித்த டென்னிஸ் வீரர்!

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ விபத்துக்கு நன்கொடை அளிப்பதாக அமெரிக்க டென்னிஸ் வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ் தெரிவித்துள்ளார்.மெல்போர்னில் நடைபெற்ற ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் கிறிஸ்டியன் கரினை... மேலும் பார்க்க

எக்ஸ் செயலியை வாங்குவதில் முறைகேடு! எலான் மீது வழக்கு!

எக்ஸ் செயலியை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) குற்றம் சாட்டியுள்ளது.டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், 2022 ஆம் ஆண்டில், சமூக ஊடகமான ட்விட்டர் ச... மேலும் பார்க்க

திறமையாளர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்கும் எலான் மஸ்க்!

தனது நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு திறமை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ள்ளார்.டெஸ்லா நிறுவனரும் அமெரிக்காவின் செயல்திறன் மேம்பாட்டுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள எலான் ம... மேலும் பார்க்க