செய்திகள் :

`தமிழ்நாடு ஒன்றும் கேரளக் கழிவுகளைக் கொட்டும் டம்ப் யார்டு இல்லை!' - கொதிக்கும் விஜய் வசந்த்

post image

கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜய் வசந்த், நாகர்கோவிலில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலிருந்தே அதானி நிறுவனத்தின் மோசடி குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வலியுறுத்தியிருந்தோம். மத்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. அதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசியல் அமைப்புச் சட்டத்தின் 75 வது ஆண்டு விழா குறித்து விவாதம் நடத்தி ஒருமனதாக பாராளுமன்றத்தை நடத்துவோம் என தீர்மானித்து  இரண்டு நாட்கள் விவாதம் நடந்துகொண்டிருந்தது. அதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது அம்பேத்கர் குறித்து கிண்டலாக பேசினார். அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும், மன்னிப்பு கேட்கவேண்டும் என நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். அம்பேத்கரை மட்டும் அல்ல அரசியலமைப்புக்கும் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், மாற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதை கண்டித்து நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

விஜய் வசந்த் எம்.பி செய்தியாளர்கள் சந்திப்பு

பா.ஜ.க அரசைப் பொறுத்தவரை நாம் ஒரு குற்றச்சாட்டை வலியுறுத்தினால் அவர்கள் அதை திசைதிருப்பும் விதமாகத்தான் எல்லாமே செய்வார்கள். நாடாளுமன்றத்துக்கு வெளியே நாங்கள் போராட்டம் நடத்த வருவது தெரிந்தே, வேண்டும் என்றே பா.ஜ.க எம்.பி-க்கள் வழிவிடாமல் நின்றனர். அதில் கைகலப்பு ஏற்பட்டது. ராகுல் காந்தி யாரையும் தள்ளிவிடவில்லை. ராகுலை தள்ளிவிட முயன்றபோதுதான் அவர் கீழே விழுந்தார். ஆனால், அதை இப்போது வேறுவிதமாக திசைதிருப்புகிறார்கள். மக்கள் திரையரங்குகளுக்கு போவதே குறைந்துவிட்டது. இந்த நிலையில் திரையரங்குகளில் விற்கப்படும் பாப்கானுக்கும் ஜி.எஸ்.டி கொண்டுவந்துவிட்டார்கள். எனவே ஜி.எஸ்.டி., யை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

விஜய் வசந்த்

கன்னியாகுமரி மாவட்டமும் தமிழ்நாடும் கேரளா கழிவுகளை கொட்டும் டம்ப் யார்டு இல்லை. இது சம்பந்தமாக ஆட்சியரிடமும் பேசியுள்ளோம். முதல்வர் குமரி மாவட்டம் வரும்போதும் கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். மணவாளக்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய அரிய மணல் ஆலையை விரிவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடலோர மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்திய அரிய மணல் ஆலையை விரிவுபடுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே மக்களின் விருப்பத்திற்கு மாறாக அந்த ஆலையை விரிவுபடுத்த விட மாட்டோம். இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என பாராளுமன்றத்திலும் வலியுறுத்துவோம்" என்றார்.

`புதுச்சேரியில் ஆல் பாஸ் முறை ரத்து... இடைநிற்றலுக்கு வாய்ப்பில்லை’ - கல்வி அமைச்சர் நமச்சிவாயம்

மத்திய அரசு கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில், 8-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கும் `ஆல் பாஸ்’ நடைமுறை அமல்படுத்தப்பட்டது.மத்த... மேலும் பார்க்க

"எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்காமல் யாரும் அரசியல் செய்ய முடியாது”- முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடியில் பெய்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்திடம் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மனு அளித்தார்.பின... மேலும் பார்க்க

`கேரள, மணிப்பூர் உட்பட ஐந்து மாநில ஆளுநர்கள் மாற்றம்' - குடியரசுத் தலைவர் உத்தரவு

ஒடிசா ஆளுநரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு, கேரளா, ஒடிசா உட்பட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இரண்டு சமூகத்துக்கு மத்தியில் தொடர்ந்து வரும... மேலும் பார்க்க

Panama : பானாமா கால்வாய் பிரச்னையில் பாய்ச்சல் காட்டும் ட்ரம்ப் - ஒப்பந்த பின்னணியும் சிக்கலும்!

எச்சரித்த ட்ரம்ப்பனாமா கால்வாய்1880-ல் பிரெஞ்சு அரசால் தொடங்கப்பட்டு, பின்னர் நிதி பிரச்னையால் கைவிடப்பட்ட பனாமா கால்வாய் திட்டத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா கையிலெடுத்து கட்டி முடித்தது. அப்ப... மேலும் பார்க்க

'பாசிச சக்திகளை அனுமதிக்காத தமிழக மக்களை பாரட்டுகிறேன்' - கிறிஸ்துமஸ் விழாவில் தெலங்கானா முதல்வர்!

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 27-வது கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. புண்ணியம் பகுதியில் இருந்து அருமனை வரை ஊர்வலம் நடைபெற்றது. அதில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன... மேலும் பார்க்க

`அம்பேத்கரை இழிவாக பேசிய அமித் ஷா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!' - கரூர் எம்.பி ஜோதிமணி

கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி ஜோதிமணி, ``அமித் ஷா நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் பற்றி இழிவாக பேசியுள்ளார். இது, நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நேருவை நேரடியாகயும், அம்பேத்கரை மறைமு... மேலும் பார்க்க