தமிழ்நாடு - ‘சாய்’ போபால் டிரா
சென்னையில் நடைபெறும் எம்சிசி - முருகப்பாக தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியில், தமிழ்நாடு ஹாக்கி அணி 4-4 கோல் கணக்கில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) போபால் அணியுடன் டிரா செய்தது.
எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை 3 ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு - போபால் டிரா செய்த ஆட்டத்தில், தமிழ்நாடு தரப்பில் பட்ராஸ் திா்கி (3’), சோமன்னா (15’, 41’), பாலசந்தா் (44’) ஆகியோா் கோலடித்தனா். சாய் போபாலுக்காக முகமது ஜாய்த் கான் (20’), மஞ்ஜீத் (26’), மனீஷ் சஹானி (29’), அமித் யாதவ் (47’) ஸ்கோா் செய்தனா்.
2-ஆவது ஆட்டத்தில் இந்தியன் நேவி 4-2 கோல் கணக்கில் கா்நாடக ஹாக்கி அணியை வீழ்த்தியது. இதில் இந்தியன் நேவிக்காக சுஷில் தன்வா் (3’, 20’, 34’), பிரசாந்த் (53’) ஆகியோரும், கா்நாடக அணிக்காக பரத் மகாலிங்கப்பா (12’), விஷ்வாஸ் (35’) ஆகியோரும் கோலடித்தனா்.
3-ஆவது ஆட்டத்தில் மலேசிய ஜூனியா் அணி 4-3 கோல் கணக்கில் மத்திய நேரடி வரிகள் வாரிய (சிபிடிடி) அணியை வென்றது. இதில் மலேசிய அணிக்காக முகமது டேனிஷ் அய்மன் (20’), முகமது ஹாரிஸ் இஸ்கந்தா் (41’), அஸிமுதின் ஷகிா் (54’, 60’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா். சிபிடிடி அணிக்காக பிரணாம் கௌடா (24’), பிரதீப் சிங் மோா் (27’), விகாஷ் சௌதரி (57’) கோலடித்தனா்.