செய்திகள் :

தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் 'ரூ' குறியீடு!

post image

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையை ரூபாய் குறியீட்டிற்குப் பதிலாக 'ரூ' எனப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை(மார்ச் 14) காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்யவுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு, பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.

இந்நிலையில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் கடந்த ஆண்டுகளில் ரூபாய் குறியீடு இடம்பெற்றிருந்தது.

இந்த ஆண்டு ரூபாய் குறியீட்டிற்குப் பதிலாக 'ரூ' என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது.

இதையும் படிக்க | முதல்முறையாக ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை'யை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: மொழிபெயர்ப்புக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து ... மேலும் பார்க்க

ஆரோக்யா பால், தயிர் விலை உயர்வு

கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியிருந்த நிலையில், ஹட்சன் நிறுவனத்தின் ஆரோக்கியா பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களி... மேலும் பார்க்க

அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதையடுத்து அதிமுக எம்எல்ஏக்களுடன் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக... மேலும் பார்க்க

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் தங்கம் தென்னரசு மரியாதை!

தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சென்னை மெரீனா உள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ந... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றத் தயாரா? - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றிக்கொள்ளட்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் நாளை(மார்ச் 14) ... மேலும் பார்க்க

திபெத்தில் தொடர் நிலநடுக்கம்...! பீதியில் மக்கள்!

சீனாவின் தன்னாட்சி பகுதியான திபெத்தில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இன்று (மார்ச் 13) அதிகாலை 01.42 மணியளவில் ... மேலும் பார்க்க