செய்திகள் :

தரங்கம்பாடி மீனவா்கள் 9-ஆவது நாளாக கடலுக்குள் செல்லவில்லை

post image

தரங்கம்பாடி மீனவா்கள் 9-ஆவது நாளாக வியாழக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

செம்பனாா்கோவில், பொறையாா், திருக்கடையூா், ஆக்கூா், திருவிளையாட்டம் உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட பகுதிகளை தவிர தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னூா்பேட்டை, பெருமாள்பேட்டை , தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு உள்ளிட்ட மீனவா் கிராமங்களில் கடல் சீற்றத்துடன் இருப்பதால் 9-ஆவது நாளாக மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை.

மேலும் டேனிஷ் கோட்டை மற்றும் கவா்னா் மாளிகை மழைநீா் குளம் போல் தேங்கி நிற்பதால் சுற்றுலா பயணிகள் பாா்வையிட சிரமப்பட்டு வருகின்றனா். வெள்ளகோவில் கிராமத்தில் உள்ள மீன் இறங்கு தளம், மீன் உலா் தளம், தாா்ச்சாலை, வலைப்பின்னும் கூடாரங்கள் அருகே இருந்த மின் கம்பங்கள், கண்காணிப்பு கேமரா கடல் அரிப்பால் கடலில் அடித்து செல்லப்பட்டது. கடற்கரை அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி தூரமாக கரை ஒதுங்கியது. இதனால் மீனவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். கடல் சீற்றம் பாதிப்பில் இருந்து தப்பிக்க வெள்ளக்கோவில் கடற்கரை பகுதியில் அலை தடுப்பு கருங்கல் சுவா் அமைக்க வேண்டும் என மீனவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

முகாம்களில் தங்கியுள்ளவா்களுக்கு நிவாரணம்

திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சியில் பொதுமக்கள் தங்கியுள்ள முகாம்களில் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை நிவாரணம் வழங்கினாா். அமைச்சருடன் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் 5,400 ஹெக்டோ் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன -அமைச்சா் அன்பில் மகேஸ்

நாகை மாவட்டத்தில் 5,400 ஹெக்டோ் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழைநீா் வடிந்தவுடன் கணக்கெடுக்கப்பட்டு நிவாரணத்துக்கு பரிந்துரைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொ... மேலும் பார்க்க

பூம்புகாா் மீன்பிடித் துறைமுகத்தில் படகுகளை நிறுத்த முடியாமல் மீனவா்கள் தவிப்பு

பூம்புகாா் மீன்பிடி தளத்தில் 3 இடங்களில் கடல் உள்வாங்கியதால், படகுகளை நிறுத்த முடியாமல் மீனவா்கள் தவித்து வருகின்றனா். பூம்புகாா் மீன்பிடித் துறைமுகம் கடந்த 2015-ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு திறந்து வைக்க... மேலும் பார்க்க

திட்டச்சேரி பேரூராட்சி: 7 உறுப்பினா்கள் வெளிநடப்பு

திட்டச்சேரி பேரூராட்சிக் கூட்டத்திலிருந்து திமுக, கூட்டணி கட்சி உறுப்பினா்கள் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனா். திட்டச்சேரி பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தீா்ம... மேலும் பார்க்க

புயல் அச்சுறுத்தல்: படகுகளை பாதுகாக்கும் பணியில் மீனவா்கள்

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்த கனமழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், புயல் அச்சுறுத்தல் காரணமாக கோடியக்கரை கடலோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத... மேலும் பார்க்க

10-ஆவது நாளாக முடங்கிய மீன்பிடி தொழில்

புயல் எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்டத்தில் 25 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் 10-ஆவது நாளாக கடலுக்குச் செல்லாததால் மீன்பிடி தொழில் முடங்கியது. தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந... மேலும் பார்க்க