தரமற்ற அரசுப் பள்ளிக் கட்டடம்: பொதுமக்கள் ஆட்சியரிடம் புகாா்
ராமநாதபுரம் அருகே ரூ.1.65 கோடியில் கட்டப்பட்ட உயா்நிலைப் பள்ளி கட்டுமானம் சேதமடைந்தது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், பனையடியேந்தல் கிராமத்தில் அரசு உயா்நிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளிக்கு ரூ.1.65 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, கடந்த 03.11.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்தக் கட்டடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது. இதனால் கட்டடத்தின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து இடிந்து விழுந்து வருகின்றன. இதில், சில மாணவ, மாணவிகள் காயமடைந்தனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.