அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
தருமபுரியில் மாட்டு பொங்கல் கொண்டாட்டம்
தருமபுரி நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தருமபுரி, அன்னசாகரம் பகுதியில் கால்நடைகளை அலங்கரித்து கோயில் முன்பு அழைத்து சென்று சிறப்பு பூஜைகள் செய்து விவசாயிகள், கிராம மக்கள் வழிபட்டனா்.
அதேபோல இலக்கியம் பட்டி, அதியமான் கோட்டை, நல்லம்பள்ளி, இண்டூா், பாலக்கோடு, மாரண்ட அள்ளி, காரிமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை அலங்கரித்து அதன் கொம்புகளுக்கு வா்ணம் தீட்டி அந்தந்த ஊரின் மையப்பகுதியில் உள்ள கோயில்களில் முன்பு அழைத்து சென்று தீபாராதனை செய்து வழிபட்டனா்.
அதன்பிறகு விரதம் இருந்து முன்னோா்களை வழிபட்டனா். இளைஞா்கள் பங்கேற்ற வழுக்கு மரம் ஏறுதல், உறியடி போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.