செய்திகள் :

தலைசிறந்த நால்வர் இருக்கிறார்கள்..! ஆஸி. பந்துவீச்சு குறித்து முன்னாள் கேப்டன் புகழாரம்!

post image

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ஆஸி. பந்துவீச்சு குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடருக்காக உலகமே காத்திருக்கிறதென ரிக்கி பாண்டிங் கூறியதை உறுதிசெய்வதுபோல முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சீசன்களில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. 2014-15இல் இருந்து இந்தியாவுடன் ஆஸி. தொடரை வெல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நேதன் லயன் (536), மிட்செல் ஸ்டார்க் (358), ஜோஸ் ஹேசில்வுட் (273), கம்மின்ஸ் (269) அதிகமான விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் டாப் 10 வரிசையில் இந்த நால்வரும் இருக்கிறார்கள்.

இந்தப் போட்டி குறித்து மைக்கேல் வாகன் கூறியதாவது:

பெர்த்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியினை பார்த்தோம். அந்தப் போட்டியில் பவுன்சர்கள் அதிகமாக இருந்தன. கடந்த 6,7 வருடமாக சிறந்த டெஸ்ட் அணியாக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இருந்து வருகின்றன.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கிறார்கள். ஆரவாரமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதனால், ஆஸி. எப்படி எதிர்த்து விளையாடுமெனப் பார்க்க ஆவலோடு இருக்கிறேன்.

இந்த தரமான ஆஸி. அணியியில் குறிப்பாக பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. ஆஸி.யின் தலைசிறந்த நால்வர் இந்தத் தொடரில் விளையாடுகிறார்கள். அதனால், இரு அணியின் வீரர்கள் எப்படி பவுன்சர்களை எதிர்கொண்டு விளையாடுவார்கள் என்பதை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் என்றார்.

டேவிட் வார்னரைப் போல மெக்ஸ்வீனி விளையாட தேவையில்லை: பாட் கம்மின்ஸ்

டேவிட் வார்னரின் ஸ்டிரைக் ரேட்டில் மெக்ஸ்வீனி விளையாடத் தேவையில்லை என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிக... மேலும் பார்க்க

“அமைதியாக இருங்கள்...” கௌதம் கம்பீருக்கு முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் அறிவுரை!

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முடியும் வரை அமைதியாக இருங்கள் என கௌதம் கம்பீருக்கு இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கியுள்ளார்.ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கா... மேலும் பார்க்க

இந்தியாவின் டேவிட் வார்னர் இவர்தான்; இளம் வீரருக்கு புஜாரா புகழாரம்!

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் குறித்து இந்திய வீரர் புஜாரா பேசியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாளை (நவம்பர் 22) முதல் தொடங்குகிறது. இரு அணிகள... மேலும் பார்க்க

நீண்ட காலம் இந்திய அணியில் விளையாட வேண்டுமா? ஜெய்ஸ்வாலுக்கு விராட் கோலி கொடுத்த அறிவுரை!

இந்திய அணியில் நீண்ட காலம் விளையாடுவது தொடர்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு விராட் கோலி அறிவுரை வழங்கியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் நாளை (நவம்பர் 22) முதல்... மேலும் பார்க்க

ஈடர்ன் கார்டன் புதிய அரங்குக்கு ஜுலான் கோஸ்வாமி பெயர்!

ஈடன் கார்டன் திடலின் பி பிளாக் அரங்குக்கு ஜுலான் கோஸ்வாமியின் பெயரை சூட்டவிருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 22ஆம் தேதி இந்திய மகளிர்- இங்கிலாந்து மகளிர்க்கு எதிராக முதல் டி20 போட்டியின... மேலும் பார்க்க

உங்களது எதிர்காலம் தெரிய வேண்டுமா? சஞ்சய் மஞ்ச்ரேக்கரை பாருங்கள்; கிண்டலடித்த முகமது ஷமி!

உங்களது எதிர்காலம் குறித்து தெரிந்துகொள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கரை பாருங்கள் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி கிண்டலடித்துள்ளார்.ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆக... மேலும் பார்க்க