செய்திகள் :

முதல்வா் தலைமையில் இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம்

post image

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினா்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 22) நடைபெற உள்ளது.

இது தொடா்பாக திமுக பொதுச் செயலா் துரைமுருகன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநிலங்களவை, மக்களவை திமுக உறுப்பினா்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், எம்.பி.க்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நவ. 25-இல் தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடா்பாக எம்.பி.க்களுக்கு முதல்வா் ஆலோசனை வழங்க உள்ளாா்.

பெண் தூக்கிட்டு தற்கொலை

சென்னை பெரும்பாக்கம் பகுதியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பெரும்பாக்கம் எழில் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஐஸ்வரியா (34). தனியாா் நிறுவன ... மேலும் பார்க்க

வன்னியா் உள் இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்

வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து முதல்வருக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள... மேலும் பார்க்க

ரெளடி வெட்டி கொலை: போலீஸாா் விசாரணை

எண்ணூரில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், 4 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். எண்ணூா் அன்னை சிவகாமி நகரை சோ்ந்தவா் பாலா (எ) யுவராஜ்(26). எண்ணூா் காவல் நிலையத்தில் உள்ள ரெ... மேலும் பார்க்க

ஆதிக்கத்தை வெல்லும் ஆற்றல் மொழி, கலைக்கு உண்டு

எத்தகைய ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழி, கலை ஆகியவற்றுக்கு உண்டு என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். முத்தமிழ்ப் பேரவை பொன் விழா ஆண்டு மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

அரசு பேருந்துகளின் சேவை, தரம் குறித்து பயணிகளிடம் ஆய்வு

மாநகா் பேருந்துகளின் சேவை மற்றும் தரம் குறித்த பயணிகளின் மனநிறைவை மதிப்பீடு செய்ய ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து, மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண்... மேலும் பார்க்க

குளங்கள் மறுசீரமைப்பு 50 சதவீதம் கூட முடியவில்லை

சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள குளங்களின் மறுசீரமைப்புப் பணிகள் 50 சதவீதம் கூட நிறைவடையவில்லை என அறப்போா் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தவிா்... மேலும் பார்க்க