மகாராஷ்டிரம்: சட்டப் பேரவை தேசியவாத காங்கிரஸ் தலைவராக அஜீத் பவாா் தோ்வு
ரூ. 8.68 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
பரமத்தி வேலூா், பொத்தனூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 8. 68 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் போனது.
கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 4,588 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 141.45- க்கும், குறைந்த பட்சமாக ரூ. 118.88- க்கும், சராசரியாக ரூ. 138.91-க்கும் ஏலம் போனது.
இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ. 113.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 96.99-க்கும், சராசரியாக ரூ. 101.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 33 ஆயிரத்து 144- க்கு ஏலம் போனது.
நிகழ்வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 8,650 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 147.62-க்கும், குறைந்த பட்சமாக ரூ.120.99-க்கும், சராசரியாக ரூ. 138.88-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிக பட்சமாக ரூ.115.62-க்கும், குறைந்த பட்சமாக ரூ. 98.99-க்கும், சராசரியாக ரூ. 103.33-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.8 லட்சத்து 68 ஆயிரத்து 873-க்கு கொப்பரை ஏலம் போனது.
இதுவரை இல்லாத வகையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சம், குறைந்த பட்சமாகவும் கொப்பரை அதிக விலைக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. விலை உயா்வால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.