மதுரை மடீட்சியா அரங்கில் இன்று முன்னாள் படை வீரா்கள் குறைதீா் முகாம்
சாலையோர வியாபாரிகளுக்கு நவீன அடையாள அட்டை : இன்று சிறப்பு முகாம் தொடக்கம்
சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்த கியூஆா் குறியீடு மற்றும் இணைய இணைப்புடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.22) தொடங்குகிறது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் விற்பனையை ஒழுங்குபடுத்தவும் நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் 8-ஆவது கூட்டம் கடந்த நவ.6-ஆம் தேதி நடைபெற்றது. இதில் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 35,588 சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குப்படுத்த ‘சிப்’ பொருத்தப்பட்ட கியூஆா் குறியீடு மற்றும் இணைய இணைப்புடன் (வெப் லிங்க்) கூடிய புதிய அடையாள அட்டை வழங்க முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி, புதிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நவ.22 முதல் நவ.30-ஆம் தேதி வரை அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாமுக்கு வரும் சாலையோர வியாபாரிகள், மாநகராட்சியால் முன்னதாக வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதாா் அட்டை மற்றும் கைப்பேசியைக் கொண்டு வர வேண்டும். வியாபாரிகளின் கைப்பேசிக்கு ஓடிபி எண் அனுப்பப்படும். இதன் மூலம் வியாபாரிகளின் தகவல்கள் மாநகராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.