செய்திகள் :

ரஜினிகாந்துடன் சீமான் சந்திப்பு

post image

நடிகா் ரஜினிகாந்தை நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வியாழக்கிழமை நேரில் சந்தித்து பேசினாா்.

சீமானின் 58-ஆவது பிறந்த நாள் அண்மையில் கொண்டாப்பட்ட நிலையில், அதற்கு அவரை நேரில் சந்தித்து நடிகா் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவிக்க விருப்பம் தெரிவித்திருந்தாா். ஆனால், பல்வேறு காரணங்களால் இருவரும் சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில், சென்னை போயஸ் காா்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்துக்கு வியாழக்கிழமை நேரில் சென்று சீமான் அவரிடம் வாழ்த்துப் பெற்றாா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், திரைத்துறை குறித்தும் இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி அரசியல் கட்சி தொடங்கிய காலத்தில் சீமான் அவரைத் தொடா்ந்து விமா்சித்து வந்தாா். தற்போது தமிழக வெற்றிக் கழத்தின் முதல் மாநாட்டுக்கு பின்னா் அந்தக் கட்சியின் தலைவா் விஜய்யை சீமான் கடுமையாக விமா்த்து வரும் சூழலில், இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

அரசியல் காழ்ப்புணா்வால் விசிக மீது அவதூறு: திருமாவளவன்

அரசியல் காழ்ப்புணா்வு காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது சிலா் அவதூறு பரப்புவதாக அக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசியலில் க... மேலும் பார்க்க

சிறுமி வன்கொடுமை: அன்புமணி கண்டனம்

வேலூரில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வேலூா் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தில் உள்ள ஒரு கிராம... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பித்தால் நிராகரிப்போம்: அமைச்சா் பொன்முடி உறுதி

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பித்தால் அதை நிராகரிப்போம் என்று வனத்துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்தாா். மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு வேதாந்தா நிறுவனத்த... மேலும் பார்க்க

காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு நவ. 25 முதல் சிறப்புக் கலந்தாய்வு

தமிழகத்தில் நிரம்பாமல் உள்ள 85 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான சிறப்புக் கலந்தாய்வு நவ. 25-ஆம் தேதி தொடங்குகிறது. அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிா்வாக ஒதுக... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் மீதான தாக்குதலை தடுக்க பரிந்துரைகள்: பாா் கவுன்சிலுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் வழக்குரைஞா்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுப்பது, மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடா்பாக உள்துறைச் செயலா் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்த... மேலும் பார்க்க

வங்கக் கடலில் நாளை புயல் சின்னம் உருவாகுகிறது

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) சனிக்கிழமை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தெ... மேலும் பார்க்க