``தவறான விமானம் தான் வாழ்க்கையை மாற்றியது'' - காதல் கதையை பகிர்ந்த ஸ்ரேயா சரண்
நடிகை ஸ்ரேயா சரண் தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்துள்ளார். அவர் ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஷீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு சில காலம் ஒதுங்கியிருந்த ஸ்ரேயா, தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அவர் நடித்த மிராய் என்ற படம் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்துள்ளது.
இந்தப் பட வெற்றி மற்றும் தனது காதல் கணவரை எப்படி சந்தித்தேன் என்பதைக் குறித்து ஸ்ரேயா சரண், கபில் சர்மா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பழைய நினைவுகளைப் பகிர்ந்தார். அதில்,

"நான் தவறான விமானத்தை முன்பதிவு செய்ததால் மாலத்தீவுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மாலத்தீவு சென்றபோது நான் தனியாக நின்றுக்கொண்டிருந்தேன்.
அப்போது சொகுசுப் படகு ஒன்று தெற்கு நோக்கிப் புறப்பட்டது. நான் அந்தப் படகில் செல்ல முடிவு செய்தேன்.
படகில் வெளியில் நான் தனியாக நின்றுக்கொண்டிருந்தேன். எனக்குப் படகில் யாரும் தெரியாது. திடீரெனத் திரும்பியபோது, எனக்குப் பின்புறம் ஆண்ட்ரே கோஷீவ் நின்றிருந்தார்.
அப்போதுதான் அவரை முதல் முறையாகச் சந்தித்தேன். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு எதுவும் தெரியாது.
நாங்கள் நீச்சல் அடிக்கச் சென்றபோது அதிகமாகப் பேசினோம். அதன் பிறகு ஒருவரை ஒருவர் டேட்டிங் செய்ய ஆரம்பித்தோம்.
சில மாதங்கள் கழித்து நான் நடித்த திரிஷ்யம் படத்தை அவர் பார்த்து பயந்துவிட்டார். ஆனால் அதன் பிறகு நாங்கள் காதலிக்க ஆரம்பித்தோம்." என்றார்.

ரஷ்ய மொழியை கற்றுக்கொண்டீர்களா? என்று கபில் சர்மா கேட்டதற்கு,
"முதலில் மோசமான வார்த்தைகளையே கற்றுக்கொண்டேன். ஆனால் இப்போது எனது மகள் மூலம் ரஷ்ய மொழியை முறையாகக் கற்றுக்கொண்டு வருகிறேன்.
ஆண்ட்ரே இந்திய மொழியை எளிதாகப் புரிந்துகொள்கிறார். அவர் இந்தியா வந்தபோது இந்திய காமெடி ஷோக்கள் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது," என்றார்.
ஸ்ரேயா, 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரேவைத் திருமணம் செய்து கொண்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...