எஸ்ஏ20 ஏலம்.. டெவால்டு பிரேவிஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்பட 500 வீரர்கள் பதிவு!
Coolie: ``நடிச்சது ரஜினி சார், அந்த குரல் AI'' - சஸ்பென்ஸ் உடைத்த லோகேஷ் கனகராஜ்
கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற AI தொழில்நுட்ப நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார்.
அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்:
“சினிமா பார்த்துதான் வாழ்க்கையை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது, என்னைப் பொறுத்தவரை சரியானது இல்லை.

ஒரு சினிமா நம்மீது செல்வாக்கு செலுத்தினால், வளர்ந்த விதமே தவறாகிவிடும். சினிமா ஒரு பொழுதுபோக்கு, ஒரு படம் நம்மை சிந்திக்க வைக்கலாம், அவ்வளவுதான்." என்றார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ்,
“சினிமா துறையில் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவி இருக்கும். ஆனால் அது ஆதிக்கம் செலுத்துமளவிற்கு இருக்காது. அதைச் சரியாக பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம். அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது நம் கையில்தான் உள்ளது,” என்றார்.

கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்தின் பிளாஷ்பேக் காட்சிகள் இருக்கும். அதில் நடித்தது ரஜினி சார் தான். அதனை டி-ஏஜிங் செய்து இருக்கிறோம். ஆனால் அந்தக் குரல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது.
“எதிர்காலத்தில் நான் அனிருத் இல்லாமல் படமே பண்ணவே மாட்டேன். நான் அனிருத்தை பயன்படுத்தி வருகிறேன். அதனால் எனக்கு ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்த தேவையில்லை” என்று நகைச்சுவையாக கூறியவரிடம்,

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் படத்தில் நடிப்பது பற்றிய கேள்விக்கு, “நானும் அனிருத் இணைந்து நடிப்பது குறித்து அருண் மாதேஸ்வரன் தான் கூற வேண்டும்” என்றார்.