செய்திகள் :

தவெக விஜய்: "35 நிமிடங்களே பரப்புரை, பொது சொத்து சேதமடைந்தால்..." - காவல்துறை விதித்த நிபந்தனைகள்!

post image

தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நாளை (செப் 20) சனிக்கிழமை நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்களைச் சந்தித்து பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்,

இந்த பிரசாரத்துக்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கிறது, அவற்றைப் பின்பற்றி நடக்க வேண்டுமென்று தவெக தலைமை தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

TVK
TVK

புத்தூர் ரவுண்டானாவில் உள்ள அண்ணா சிலை அருகே பரப்புரை செய்ய விஜய்க்கு அனுமதி அளித்துள்ள காவல்துறை, இதற்கு விதித்திருக்கும் நிபந்தனைகளைக் காணலாம்.

காவல்துறை விதித்த நிபந்தனைகள்

பரப்புரையில் நண்பகல் 1 மணிக்குள் நிகழ்ச்சியை முடித்திட வேண்டும்.

கட்சித் தலைவர் விஜய் செல்லும் பகுதியில், 2 பிரதான கட்சி அலுவலகங்கள் இருப்பதால், பிரச்னைகள் ஏதும் ஏற்படாதவாறு தன்னார்வலர்களை வைத்து பார்த்துக்கொள்ள வேண்டும்.

ரவுண்டானா பகுதியானது, தமிழ்நாடு - புதுவை எல்லை என்பதால், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படக் கூடாது.

விஜய்யின் பரப்புரை வாகனத்தின் பின்னே 5 வாகனங்களுக்குமேல் செல்லக் கூடாது.

பரப்புரைக்கு வரக்கூடிய வாகனங்களுக்கு பார்க்கிங் வசதியை தாங்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.

Vijay campaign
Vijay campaign

பொதுச்சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. சேதமடையும் பொதுச் சொத்துகளுக்கு கட்சியே பொறுப்பேற்க வேண்டும்.

பெண்கள் மற்றும் பெரியவர்கள், கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாதவாறு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

35 நிமிடங்கள் மட்டுமே பரப்புரை மேற்கொள்ள வேண்டும். உட்பட 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை கடைபிடிக்கத் தவறினால் பரப்புரையை இடையிலேயே நிறுத்த காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும் கூறப்பட்டிருக்கிறது.

மின்சாரத்தை நிறுத்த மனு

நாகையில் விஜய் சாலை மார்க்கமாக வாஞ்சூர் ரவுண்டாணா, தொடங்கி நாகூர், தெற்கு பால்பண்ணைச்சேரி, வடகுடி சாலை வழியாக கிழக்கு கடற்கரை சாலையை அடைந்து அவ்வழியாக பரப்புரை செய்யவுள்ள புத்தூர் அண்ணா சிலை அருகில் வருகைபுரிந்து மக்களைச் சந்தித்து உரையாற்றவுள்ளார்.

இவ்வழித்தடத்தில் உயர் மின்னழுத்த கம்பி உள்ளதால் விஜய்யின் நிகழ்வு தொடங்கி முடியும்வரை அவ்வழியில் உள்ள வழித்தடங்களில் மின் நிறுத்தம் செய்து தரும்படிபயும் அல்லது மின் ஊழியர்களை நியமித்து பொதுமக்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கிடுமாறும் மின் பொறியாளர் அலுவலகத்தில் தவெக-வின் நாகை மாவட்டச் செயலாளர் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exclusive: 'அதிமுக தொண்டர்களை அரவணைக்கும் சரணாலயம்தான் அறிவாலயம்!'- திமுகவில் இணைந்த மருது அழகுராஜ்

அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடுகளின் முன்னாள் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் ஓ.பி.எஸ் அணியில் இருந்தார். ஆனால், சமீபமாக விஜய்க்கும் தவெக-வுக்கும் ஆதரவாக பல்வேறு கருத்துகளையும் பேசி வந்தார். அவர் தவெக-வ... மேலும் பார்க்க

தவெக: "கம்பங்களில் ஏறக் கூடாது, கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்"- தொண்டர்களுக்கு `12' நெறிமுறைகள்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொள்வதன் பகுதியாக நாளை (செப் 20 - சனிக்கிழமை) நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மக்களைச் சந்திக்கவுள்ளார். காலை 10 மணி அளவ... மேலும் பார்க்க

`திமுக பாம்பும் இல்லை, கம்யூனிஸ்ட் தவளையும் இல்லை; பாஜகவே அதிமுகவை விழுங்கி கொண்டிருக்கிறது'- வாசுகி

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் வாசுகி கலந்து கொண்டு... மேலும் பார்க்க

”என் உணவகத்தில் ரூ.50 தான் வியாபாரம் ஆனது” - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் புலம்பிய கங்கனா!

இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத், தனது உணவகத்தில் ரூ.50 மட்டுமே வியாபாரம் ஆகுவதாக தனது சொந்த நஷ்டத்தைப் பற்றி மக்க... மேலும் பார்க்க

`வகுப்பறை முக்கியத்துவத்தை கழிப்பறைக்கும் தர வேண்டும்’ - சிரமப்படும் காரப்பட்டு அரசுப்பள்ளி மாணவிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்குட்பட்ட திருப்பத்தூர் பிரதான சாலையோரமாக அமைந்திருக்கிறது `காரப்பட்டு’ அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில், ஊமையனூர், வண்ணாம்பள்ளி, சந்தகொட்டாவூர், ... மேலும் பார்க்க

அமெரிக்கா: காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்: இனவெறி காரணமா? - பெற்றோரின் கோரிக்கை என்ன?

தெலங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது நிஜாமுதீன் (29). இவர் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிவந்தார். இந்த நிலையில், அவரை காவல்துறை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியானது... மேலும் பார்க்க