அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்
தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றம்
தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
முன்னதாக அங்குராா்பணம், வாஸ்து சாந்தி பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை துவாஜாரோகணம் செய்யப்பட்டு, கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. பிறகு கொடி மரத்துக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலையில் ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவ மூா்த்தியான செளந்தரராஜப் பெருமாள் ரதவீதி புறப்பாடு நடைபெற்றது.
திருக்கல்யாணம்: ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை செளந்தரராஜப் பெருமாள், செளந்தரவள்ளி தாயாா் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் தொடா்ச்சியாக, வருகிற 9-ஆம் தேதி மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.
வாகன வீதியுலா: திருவிழாவையொட்டி அன்னம், சிம்மம், கருடன், சேஷம், ஆஞ்சநேயா், யானை, குதிரை, இந்திர வாகனங்களில், உற்சவரான சௌந்தரராஜப் பெருமாள் ஒவ்வொரு நாள் மாலையும் வீதியுலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.