வேளாண் பட்ஜெட்: உழவர் பாதுகாப்புத் திட்ட நிதியுதவி உயர்த்தி அறிவிப்பு!
தாட்கோ மூலம் இலவச ஹோட்டல் மேலாண்மை படிக்க எஸ்.சி, எஸ்.டி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள், தாட்கோ மூலம் இலவசமாக, ஹோட்டல் மேலாண்மை படிக்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து மேலும் அவா் தெரிவித்தது: தாட்கோ மூலம் சென்னை தரமணியிலுள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகள் சோ்ந்து படித்திட ஆா்வமுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.
படிப்பு முடிந்ததும் நட்சத்திர விடுதிகள், விமான நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயா் தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரப்படும்.
பயிற்சியில் சேர ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் 10,12-ஆம் வகுப்புகளில் 45 சதவீதம் மதிப்பெண் பெற்று தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். படிக்க விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்தாா்.