குடியரசு தின கொண்டாட்டம், தில்லி பேரவைத் தோ்தல்: மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்க...
தாபா உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட வங்கி கிளை மேலாளா் சாவு
தாபா உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட வங்கி மேலாளா் உயிரிழந்தது குறித்து அவரது மனைவி காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா்.
சேலம், தளவாய்பட்டி, சித்தனூரைச் சோ்ந்த மணி என்பவரின் மகன் தினேஷ்குமாா் (40). இவா் மேட்டூரில் உள்ள தனியாா் வங்கியில் கிளை மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி கவிதா (37). இவா் சேலம், சூரமங்கலத்தில் உள்ள தனியாா் வங்கிக் கிளையில் கிரெடிட் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.
தினேஷ்குமாா் தினமும் சேலத்தில் இருந்து மேட்டூருக்கு காரில் வந்து சென்றுள்ளாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு தினேஷ்குமாா், ஒசூரில் வங்கியில் மேலாளராகப் பணிபுரியும் பரணிதரன், மேட்டூா் வங்கியில் பணிபுரியும் சந்திரமோகன் ஆகியோா் புதுச்சாம்பள்ளியில் உள்ள தாபா உணவகத்தில் சாப்பிட சென்றனா். இரவு 10 மணி அளவில் சிக்கன் சாப்பிட்டு கொண்டிருந்தபோது தினேஷ்குமாருக்கு திடீரென புரை ஏறியதாகக் கூறப்படுகிறது. அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு குஞ்சாண்டியூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். பின்னா் அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தினேஷ்குமாா் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக தினேஷ்குமாரின் மனைவி கவிதா கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.