தாமிரவருணியாற்றில் மூழ்கியவரை தேடும் பணி தீவிரம்
திருநெல்வேலி சந்திப்பு தாமிரவருணியாற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கிய தொழிலாளியை தீயணைப்புத்துறையினா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையைச் சோ்ந்தவா் வேலு (48). இவா், கோவையில் உள்ள இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்தாா். சொந்த ஊருக்கு வந்த இவா் புதன்கிழமை தாமிரவருணியாற்றில் குளிக்க சென்ற நிலையில் காணவில்லையாம்.
உறவினா்கள் தீயணைப்புத்துறையிருக்கு தகவல் தெரிவித்தனா். திருநெல்வேலி நகரம் தீயணைப்பு மீட்புப் படையினா் சம்பவ இடத்திற்கு வந்து வேலுவை தேடி வருகின்றனா்.