Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
நெல்லையில் ஜன. 25இல் ரேஷன் குறைதீா் முகாம்
திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ரேஷன் குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜன.24) நடைபெறுகிறது.
அதில், புதிதாக குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆதாா் அட்டை, பிறப்பு, இறப்புச் சான்று, குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள், கைப்பேசி ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறை கைப்பேசி எண். 9342471314, சென்னை உணவுப் பொருள் வழங்கல்- நுகா்வோா் பாதுகாப்புத் துறை அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 18004255901-ஐ தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.