வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி - டிரம்ப் அறிவிப்பு
தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு சிறப்பு மின்சார ரயில்கள்
கிளாம்பாக்கத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆயுத பூஜை (புதன்), காந்தி ஜெயந்தி (வியாழன்) விடுமுறையைத் தொடர்ந்து வார இறுதி நாள்களின் விடுமுறையும் வருவதால், சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி செல்வோர்களில் ஒருசிலர் பேருந்துகளிலும், இன்னும் ஒருசிலர் ரயில்களிலும் செல்வர். கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு இரு சிறப்பு மின்சார ரயில்கள் இன்று இரவு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.