செய்திகள் :

``தாராவியில் வீடு பெற தகுதியில்லாத 1 லட்சம் மக்களுக்கு...” - ஏக்நாத் ஷிண்டே சொல்வதென்ன?

post image

மும்பை தாராவி, ஆசியாவிலேயே அதிக அளவில் குடிசைகள் உள்ள பகுதி. இக்குடிசைகளை அகற்றிவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. தற்போது அத்திட்டம் தீவிரம் அடைந்திருக்கிறது. தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டத்தை மாநில அரசு டெண்டர் விட்டு அதானி நிறுவனத்திற்கு வழங்கி இருக்கிறது. அதானி நிறுவனம் மாநில அரசுடன் இணைந்து கூட்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி தாராவியில் உள்ள குடிசைகளை இப்போது கணக்கெடுத்து வருகிறது.

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே இக்கணக்கெடுப்பு தொடங்கி முழுவேகத்தில் நடந்து வருகிறது. இதில் யாருக்கு இலவச வீடு கிடைக்கும், யாருக்கு கிடைக்காது என்ற ஒரு கேள்வி மக்கள் மத்தியில் இருந்து கொண்டிருக்கிறது. அதோடு தாராவியில் உள்ள சிறுதொழில்களுக்கு எங்கு இடம் ஒதுக்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏக்நாத் ஷிண்டே

தாராவி குடிசைவாசிகளுக்காக ஏற்கனவே அதானி நிறுவனம் ரயில்வேயிடம் வாங்கிய நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள். தாராவியில் இருக்கும் குடிசைகள் பல அடுக்குகள் கொண்டதாக இருக்கிறது. குடிசைகளின் மேல் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மாற்று வீடு வழங்கப்படுமா என்ற கேள்வி குடிசைவாசிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இப்பிரச்னை குறித்து மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, ''தாராவியில் வசிக்கும் மக்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு இதற்கு முன்பு இருந்த விதிமுறைகள் தடையாக இருந்தது. அனைவருக்கும் வீடு வழங்க முந்தைய விதிகளில் இடமில்லை. தகுதியானவர்களுக்கு மட்டுமே வீடு வழங்கப்படும் என்று மகாவிகாஸ் அகாடி அரசு தெரிவித்தது. ஆனால் இப்போது தாராவி மக்கள் அனைவருக்கும் இலவச வீடு வழங்கப்படும்.

தாராவியில் வீடு பெற தகுதியில்லாத 1 லட்சம் மக்களுக்கு மும்பை புறநகர் பகுதியில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். 2007ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட குடிசைவாசிகளுக்கு தாராவியிலேயே வீடு வழங்கப்படும். 2007ம் ஆண்டுக்கு பிறகு மாநிலத்தில் வீட்டு வசதி மேம்பாட்டுக்கொள்கை உருவாக்கப்படவில்லை. ஆனால் இப்போது புதிய வீட்டு வசதி கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது. மில் தொழிலாளர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும்'' என்றார்.

Seeman : `உடல் இச்சை ஏற்பட்டால்...' - பெரியாரை மேற்கோள்காட்டி சீமான் உண்டாக்கிய சர்ச்சை

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்திருந்தார். அப்போது, பெரியாரை மேற்கோள்காட்டி அவர் பேசிய சில விஷயங... மேலும் பார்க்க

DMK Vs Congress: ஈரோடு கிழக்கு யாருக்கு? | ஆளுநரை கோத்துவிடும் DMK கூட்டணி கட்சிகள்?- Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று 'யார் சார் அது?' பேட்ஜ்!* - இரண்டாவது நாளாக EPS இல்லை... ஏன்?* - அண்ணா பல்கலைக்கழக விவகாரம் - பேரவையில் கவன ... மேலும் பார்க்க

திமுக செயல்பாடுகள் : எதிர்க்கும் தோழமைகள் - நெருக்கடியில் ஸ்டாலின்?

எதிர்க்கும் தோழர்கள்:`அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா?’ மார்க்சிஸ்ட் கட்சியினர் கடந்த சில மாதங்களாகவே ஆளும் அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். அதிலும், சாம்சங் தொழிற்சாலை விவகாரத்திலிருந்து விமர்சனம்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : `மீண்டும் ஈ.வி.கே.எஸ் குடும்பமா?’ காங்கிரஸ் வேட்பாளர் ரேஸில் யார் யார்?

ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ-வாக இருந்த திருமகன் ஈவேரா காலமானதையடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த 14.12.20... மேலும் பார்க்க