திடக்கழிவு மேலாண்மை பயிற்சி பட்டறை
சீா்காழி விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சீா்காழி நகராட்சி சாா்பில், காலநிலை மாற்றம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஒரு நாள் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் சுகந்தி வரவேற்றாா். சீா்காழி நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். ஏ.வி.சி. கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியா் ஜெயக்குமாா், கிருஷ்ணப்பா ஆகியோா் சுற்றுச்சூழல் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து கருத்துரையாற்றினா்.
இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் அபிராமி செய்திருந்தாா்.