செய்திகள் :

"திடீர் மூச்சுத் திணறல்" - தீவிர சிகிச்சைப் பிரிவில் சங்கர் கணேஷ்; மகன் ஸ்ரீகுமார் சொல்வது என்ன?

post image

தமிழ் சினிமாவில் எழுபது, எண்பதுகளில் பிசியான இசையமைப்பாளராக இருந்த இரட்டையர்கள் சங்கர் கணேஷ்.

'பருத்தி எடுக்கயில', 'பட்டு வண்ண ரோசாவாம்', 'ஒரே ஜீவன்', 'பட்டுக் கோட்ட அம்மாலு', கொண்ட சேவல் கூவும் நேரம்' என எண்ணற்ற எவர்கிரீன் பாடல்களைத் தந்தவர்கள் இவர்கள்.

அறுபதுகளில் ஆரம்பித்து எம்.ஜி.ஆர்., சிவாஜி ரஜினி, கமல் எனப் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் முதலில் சங்கர் காலமானார்.

அதன் பிறகு தன் நண்பரின் பெயரும் தன்னுடனேயே இருக்கட்டுமென விரும்பிய கணேஷ், தன்னை சங்கர் கணேஷ் என்றே அடையாளப்படுத்தத் தொடங்கினார்.

சங்கர் கணேஷின் மகன் ஸ்ரீகுமார்
sree kumar

கழுத்து நிறைய நகைகள் கையில் கிளவுஸ் இவைதான் சங்கர் கணேஷின் அடையாளம்.

வயதாகி விட்டதால் எப்போதாவது மேடையேறிப் பாடுவதுடன், அவ்வப்போது சில பக்தி ஆல்பங்களை உருவாக்கி வந்தார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இதயத்தில் பிரச்னை வந்ததால் 'பாட வேண்டாம்' என மருத்துவர்கள் ஆலோசனைகள் தந்திருந்தார்களாம்.

எனவே வீட்டில் ஓய்வெடுத்து வந்தவருக்கு நேற்று முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது.

உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலில் அட்மிட் செய்திருக்கிறார்கள்.

பிறகு குடும்ப மருத்துவரின் யோசனை படி அங்கிருந்து போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று அட்மிட் செய்திருக்கிறார்கள்.

சங்கர் கணேஷின் மகனும் நடிகருமான ஸ்ரீகுமாரைத் தொடர்பு கொண்டு இது தொடர்பாகக் கேட்ட போது,

"இப்ப உடல்நிலை பரவால்ல. ஆனா தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் இருக்கிறார். அப்பா குணமாக அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்யணும்னு இந்த நேரத்துல கேட்டுக்க ஆசைப்படுறேன்" என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Ajith: ``அஜீத் மீது க்ரஷ் இருந்தது; ஆனால், அவர் சொன்ன விஷயம்...." - நடிகை மகேஷ்வரி ஷேரிங்ஸ்

பாஞ்சாலங்குரிச்சி', நேசம்', `உல்லாசம்' போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மகேஷ்வரி. இவர் மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் சகோதரியின் மகள். சமீபத்தில் நடிகர் ஜெகபதி பாபுவுடனான சிறப்பு நேர்காணலில் நடிகை மகேஷ்வரி ... மேலும் பார்க்க

'அவர் மீது பொதுவான முத்திரையைக் குத்துறாங்க, ஆனா...' - பா.ரஞ்சித் உதவிகள் குறித்து இயக்குநர் ஷான்

'தண்டகாரண்யம்' படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கிராமத்தில் உள்ள அஞ்செட்டி என்ற பழங்குடியினர் வாழும் பகுதியில் நடைபெற்றிருக்கிறது. அந்த ஊருக்குச் செல்ல சரியான பாதைகூட இல்லாமல் இருந்த ... மேலும் பார்க்க

Kushi Rerelease: ``குஷியைத் தொடர்ந்து விஜய் சாரோட அந்தப் படத்தையும் ரீரிலீஸ் பண்றோம்" - சக்திவேலன்

விஜய்யின் 'குஷி' திரைப்படம், கடந்த 2000-ம் ஆண்டு திரைக்கு வந்து பெருமளவு கொண்டாடப்பட்டு அப்போதைய டிரெண்ட் செட்டராக அமைந்தது.பாடல்கள், வசனங்கள் எனப் படத்தில் பட்டியலிட பலருக்குப் பிடித்தமான ஹைலைட் விஷய... மேலும் பார்க்க

Aishwarya rajessh: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அசத்தல் கிளிக்ஸ் | Photo Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொ... மேலும் பார்க்க

Rhythm: "தண்ணீர்க் குடத்தில் பிறக்கிறோம் தண்ணீர்க் கரையில் முடிக்கிறோம்"- வைரமுத்து நெகிழ்ச்சி

இயக்குநர் வசந்த் இயக்கத்தில், அர்ஜுன், மீனா, ஜோதிகா, நாகேஷ், ரமேஷ் அரவிந்த், லக்ஷ்மி , மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியானத் திரைப்படம் 'ரிதம்'. இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். ... மேலும் பார்க்க

"எளியவர்களுக்கு உணவு எட்டாக்கனியாகக் கூடாது" - தாயின் பெயரில் அன்னதான விருந்து தொடங்கிய லாரன்ஸ்

நடிகரும், சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ் தனது தாயார் பெயரில் எளியவர்களுக்கு அன்னதான விருந்தைத் தொடங்கியிருக்கிறார்.இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கங்களில், "என் அம்மாவின் பெயரில் என் மனதுக்கு நெருக... மேலும் பார்க்க