செய்திகள் :

திட்டமிட்ட தேதிக்கு முன்பே ஓடிடிக்கு வரும் தக் லைஃப்?

post image

நடிகர் கமல் ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் ஓடிடியில் விரைவில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் கடந்த வியாழக்கிழமையன்று (ஜுன். 5) வெளியானது.

படத்தின் கதை மற்றும் சிம்பு, த்ரிஷாவின் கதாபாத்திரங்கள் அளித்த ஏமாற்றம் என பல விஷயங்கள் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதால் வணிக ரீதியாக இப்படம் கடுமையானத் தடுமாற்றத்தை அடைந்தது.

இதுவரை இப்படம் இந்தியளவில் ரூ. 40 கோடிதான் வசூலித்திருக்கிறதாம். இத்தகவல் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, திரையரங்க வெளியீட்டுத் தேதியைத் தொடர்ந்து 8 வாரங்கள் கழித்தே நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இப்படம் வெளியாகும் என கமல் ஹாசன் தெரிவித்திருந்தார்.

ஆனால், படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்வியடைந்ததால் விரைவிலேயே ஓடிடிக்குக் கொண்டு வர நெட்பிளிக்ஸ் முடிவு செய்துள்ளதாம். அதற்கான அறிவிப்பு இன்னும் சில நாள்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: வித்தியாசமாக அப்டேட் கொடுத்த லாயர் படக்குழு!

ஆமீர் கான் - லோகேஷ் கனகராஜ் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

நடிகர் ஆமீர் கான் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய வெற்றி திரைப்படங்களின் ... மேலும் பார்க்க

கூலி, குபேரா பட அனுபவம் பகிர்ந்த நாகார்ஜுனா..!

நடிகர் நாகார்ஜுனா கூலி, குபேரா படங்களில் முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது எனக் கூறியுள்ளார். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படத்திலும் சேகர் கம்முலா இயக்கியுள்ள கு... மேலும் பார்க்க

நடிப்பின் ஆற்றல் நிலையம் ஜி.வி.பிரகாஷ்..! பிறந்தநாளுக்கு இயக்குநர் வாழ்த்து!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் பிறந்த நாளில் இம்மார்ட்டல் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.இந்தப் படத்தில் கயாது லோஹர் நாயகியாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இந்தப் படத்தை இயக்குகிறார். இச... மேலும் பார்க்க

இயக்குநர் எனத் தெரியாமலேயே படத்தைப் புகழ்ந்து பேசிய ஆட்டோ ஓட்டுநர்..! அபிஷன் ஜீவிந் நெகிழ்ச்சி!

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை நடிகர்கள் ரஜினி, சூ... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! குபேரா முன்வெளியீடு ஒத்திவைப்பு!

நடிகர் தனுஷின் குபேரா படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனாவும் நடிகர் தனுஷும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளதால் குபேரா மீதா... மேலும் பார்க்க