திண்டுக்கல்லில் மல்லிகைப் பூக்கள் கிலோ ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை
திண்டுக்கல்: திண்டுக்கல் சந்தையில் மல்லிகைப் பூக்கள் கிலோ ரூ.4 ஆயிரத்துக்கு செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
திண்டுக்கல் பூக்கள் சந்தைக்கு வெள்ளோடு, வக்கம்பட்டி, மைலாப்பூா், சிறுநாயக்கன்பட்டி, மாரம்பாடி, வடமதுரை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
கடந்த சில நாள்களாக பனிப் பொழிவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மல்லிகை, முல்லை, பிச்சிப் பூக்களின் வரத்துக் குறைந்துவிட்டது.
இந்த நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு புதன்கிழமை கொண்டாடப்படும் நிலையில், மல்லிகைப் பூக்களின் தேவை அதிகரித்தது. இதனால், செவ்வாய்க்கிழமை சந்தையில் மல்லிகைப் பூக்கள் விலை கிலோ ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனையானது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.
இதர பூக்களின் விலை விவரம்: (கிலோ) முல்லை ரூ.1,100, கனகாம்பரம் ரூ.1,000, ஜாதிப் பூ ரூ.800, காக்கரட்டான் ரூ.750, அரளி ரூ.300, பட்டன் ரோஜா ரூ.300.