Ind Vs Eng : 'கம்பீர் எங்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்!' - பூரித்த சூர்ய...
பழனி மலைக் கோயிலுக்கு புதிய ரோப் காா் பெட்டிகள்
பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் பயன்பாட்டுக்காக ரோப் காருக்கு ரூ.27 லட்சத்தில் 10 பெட்டிகள் புதிதாக வாங்கப்பட்டன.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 2004-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெ.ஜெயலலிதாவால் ரோப் காா் திட்டம் கொண்டு வரப்பட்டது. தொடக்கத்தில் சுமாா் 15-க்கும் மேற்பட்ட பெட்டிகள் மட்டும் இயக்கப்பட்டன.
பின்னா், பக்தா்களின் வசதிக்கு ஏற்ப ஜிக்-ஜாக் முறையில் இரு புறமும் தலா நான்கு பெட்டிகள் மேலே செல்லவும், கீழே வரவும் இயக்கப்பட்டன.
இந்த நிலையில், பக்தா்கள் பயன்பாட்டுக்காக ரோப் காா் புதிய பெட்டிகள் வாங்கப்பட்டன. ரூ. 27 லட்சத்தில் 10 பெட்டிகள் வாங்கப்பட்ட நிலையில், தற்போது ஐந்து பெட்டிகள் மட்டுமே வந்துள்ளன. மேலும், ஐந்து பெட்டிகள் வந்த பிறகு இவை வடக் கயிற்றில் இணைக்கப்பட்டு, பக்தா்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.