Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
குப்பையில் கிடந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள்
பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளுக்கிடையே முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள் கிடந்தன.
தமிழகத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் கருணாநிதியால் தொடங்கப்பட்டது கலைஞா் காப்பீட்டுத் திட்டம். இந்தத் திட்டம் தற்போது முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் நடைமுறையில் உள்ளது. இந்த அட்டை மூலம் நடுத்தர, ஏழை மக்கள் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் உயரிய சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், பழனி வட்டாட்சியா் அலுவலகத்தின் பின்புறமுள்ள குப்பைகள் கொட்டும் இடத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் அட்டைகள் புதன்கிழமை வீசப்பட்டிருந்தன. குப்பைகளோடு குப்பைகளாக நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள் வீசப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.